மோடியின் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்!

புல்லைச் சாப்பிட்ட குழந்தைகள்

கடந்த சில தினங்களாக எங்களது மக்கள் உணவில்லாமல் சாகக் கூடிய நிலையில் இருந்தனர். என்னுடைய குழந்தைகள் மிகவும் பசியில் இருந்தனர்.

 • Share this:
  கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் பத்து வயதுகுட்பட்ட குழந்தைகள் பசியால் புல்லைப் பறித்து உண்ணக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதனால், கட்டிட வேலை உள்ளிட்ட முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருந்த லட்சக்கணக்கான வேலையிழந்து தவித்துவருகின்றனர். உணவின்றி தவிக்கும் தொழிலாளர்கள் குறித்த திவயர் ஆங்கில இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன் தமிழாக்கம்.

  பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்குக்கு உத்தரவு காரணமாக ஏராளமான முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கு கஷ்டம் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியும் விதிவிலக்கல்ல.

  கடந்த புதன்கிழமை, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் கோய்ரிபுர் கிராமத்தில் முஷாஹர் இனத்தைச் சேரந்த பத்து வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகள் ஆடு மாடுகளின் உணவுக்காக போடப்படும் புல்களை உப்பு தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் பெயர்கள் ராணி, பூஜா, விஷால், நீர்ஹூ, சோனி, கோலு என்று தெரியவந்தது. முஷாஹ்ரி பாஸ்டி பகுதியில் 10 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அதில், 10 வயதுகுட்பட்ட 12 குழந்தைகள் வசித்துவருகின்றனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுமான நிறுவனங்கள், செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தினசரி கூலிகளாக வேலை பார்த்துவருகின்றனர். அந்தக் குழந்தைகள் புல் சாப்பிடுவதை நேரில் பார்த்த நிருபர் ராஜ் குமர் திவாரி கீழ்கண்டவாறு கூறியுள்ளார். ‘ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளன்று இரவில், அந்த ஊரில் உயிரிழந்தவரின் வீட்டின் இறுதிச் சடங்கில் வழங்கப்பட்ட உணவை அந்தக் குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். மறுநாள், உண்பதற்கு வீட்டில் ஏதும் இல்லாத நிலையில் அருகிலிருந்த வயல்களிலிருந்து உருளைக் கிழங்குகளை பறித்து எண்ணெய் வறுத்து சாப்பிட்டுள்ளனர்.

  அதற்கு மறுநாள் அவர்கள் சாப்பிடுவதற்கு எந்த வழியும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, ஆடு, மாடுகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த புற்களை உப்புத் தொட்டு சாப்பிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டது. அதனையடுத்து, படகான் காவல் நிலைய அதிகாரி சஞ்சய் குமார் சிங், அந்த மக்களைச் சந்தித்து உணவு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதனையடுத்து, மாவட்ட நீதிபதி கவுசல்ராஜ் சர்மாவும் இந்த விவகாரத்தில் தலையிட்டார். கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 15 கிலோ ரேஷன் பொருள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

  இதுகுறித்து தெரிவித்த கிராம மக்கள், ‘எங்களுக்கு தற்போது 15 கிலோ உணவுப் பொருள்கள் கிடைத்துள்ளன. வரும் மாதத்தில் எங்களுக்கு மேலும் உணவுப் பொருள்கள் தேவைப்பட்டால் மீண்டும் தருவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘கடந்த சில தினங்களாக எங்களது மக்கள் உணவில்லாமல் சாகக் கூடிய நிலையில் இருந்தனர். என்னுடைய குழந்தைகள் மிகவும் பசியில் இருந்தனர். அதனால், அவர்கள் புல்லை உப்பு மற்றும் தண்ணீரைத் தொட்டு சாப்பிட்டுள்ளனர். நாங்கள், கிராம அதிகாரியைச் சந்தித்து முன்னரே உதவி கோரியிருந்தார். ஆனால், அவர் ஏதும் உதவி செய்யவில்லை. சில, நாள்கள் கழித்தே எங்களுக்கு உணவுப்பொருள்கள் கிடைத்தன. அது எத்தனை நாங்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

  இதுகுறித்து தெரிவித்த அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அஜய் ராய், ‘இந்த பகுதியைச் சேரந்த 3 நாள்களாக உணவில்லாமல் தவித்துள்ளனர். இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்ததன் அடிப்படையில் இந்த மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது பிரதமரின் தொகுதி. இந்தி தொகுதியின் மக்களிடம் அவர் பேசியுள்ளபோதும், அவர் ஏழை மக்கள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை’என்று தெரிவித்துள்ளார்.

  நன்றி:திவயர்

  Also see:
  Published by:Karthick S
  First published: