மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா விவசாயிகள் போராட்டம்
ஹரியானா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • News18
  • Last Updated: September 11, 2020, 10:52 AM IST
  • Share this:
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 அவசர சட்டங்களை கொண்டுவந்துள்ளதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா அருகே டெல்லி-பஞ்சாப் இடையேயான 44வது நெடுஞ்சாலையின் இருபக்கமும் விவசாயிகள் மறியலிலும் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவை மீறியதாக விவசாயிகள் மீது தடியடியும் நடத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பேருந்துகள், வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், கல்வீசியும் தாக்குதல் நடத்தினர்.


Also read... விவசாயிகளுக்கு உதவும் இ-கோபாலா செயலி - பிரதமர் மோடி தொடங்கி வைப்பு





போலீசார் தடியடி நடத்தியும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவில்லை. பேரிடர் தடுப்புச் சட்டத்தை மீறியும் விவசாயிகள் குவிந்தது சட்டவிரோதம் என்றும் ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading