ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் சாதியை அல்லது தங்கள் குடும்பங்களின் விருப்பத்திற்கு மாறாக காதலிப்பதற்காகவோ அல்லது திருமணம் செய்ததற்காகவோ கொல்லப்படுகிறார்கள் என்று இந்திய தலைமை நீதிபதி (CJI) டி.ஒய்.சந்திரசூட் அறநெறி மற்றும் சட்டத்தின் தொடர்பு பற்றி பேசுகையில் கூறினார்.
அமெரிக்க பத்திரிகையான டைம் இதழுக்கு தலைமை நீதிபதி அசோக் தேசாய் நினைவு விரிவுரையை 'சட்டம் மற்றும் ஒழுக்கம்: எல்லைகள் மற்றும் அடைதல்கள்' என்ற தலைப்பில் உரை ஆற்றினார். சட்டம், அறநெறி மற்றும் குழு உரிமைகளுக்கு இடையிலான பிரிக்க முடியாத இணைப்பு குறித்த கேள்விகளுக்கு உரையாற்றினார். அப்போது 1991 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 20 வயது ஆணுடன் ஊரை விட்டு சென்றதும் பின்னர் கிராமத்தின் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து குறிப்பிட்டார்.
சட்டம் வெளிப்புற உறவுகளை ஒழுங்குபடுத்தும் அதே வேளையில், ஒழுக்கம் உள் வாழ்க்கையையும் உந்துதலையும் கட்டுப்படுத்துகிறது. ஒழுக்கம் நம் மனசாட்சியை ஈர்க்கிறது. பெரும்பாலும் நாம் நடந்து கொள்ளும் விதத்தை பாதிக்கிறது.
இதையும் படிங்க: கடற்படையுடன் இன்று இணைக்கப்படுகிறது அதிநவீன மோர்முகா கப்பல்... சிறப்பம்சங்கள் என்ன?
ஒழுக்கம் என்பது நடத்தை நெறிமுறைகளை பரிந்துரைக்கும் மதிப்புகளின் அமைப்பு என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ளலாம். ஆனால், ஒழுக்கம் என்றால் என்ன என்பதில் நாம் அனைவரும் வேறுபடுகிறோம் எனக்கு எது ஒழுக்கமாக இருக்கிறதோ அது உங்களுக்கும் இல்லாமல் இருக்கும்.
ஆதிக்கக் குழுக்கள், சமூகக் கட்டமைப்பின் அடிமட்டத்தில் வைக்கப்படுகின்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் ஆசாரங்களைத் தாக்குவதன் மூலம், தமக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதைத் தடுக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். தலித் சமூகத்தை வேரறுக்க ஆதிக்க சாதியினரால் பயன்படுத்தப்படும் கருவிகளில் ஒன்றாக ஆடை இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும் கூட, சட்டம் எவ்வாறு ஆதிக்க சமூகத்தின் ஒழுக்கத்தை திணிக்கிறது என்று குறிப்பிட்டார். பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மையினரின் வாக்கு மூலமே சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெரும்பான்மை என்பது ஆதிக்கக் குழுக்களின் கைகளிலேயே உள்ளது. அதனால் சட்டம் இயற்றும்போது அவர்களது கருத்து திணிப்பு என்பதும் அதிகம் உள்ளது என்றார்.
இதையும் படிங்க :நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான உணவு தானிய கையிருப்பு உள்ளது - மத்திய அரசு தகவல்
இதனால் மாற்று சாதியில் காதல் அல்லது திருமணம் செய்து கொண்டால் அதை பெரும் குற்றம் என்ற கண்ணோட்டத்திற்கு கொண்டு வந்து அவர்களை ஆணவக் கொலை செய்வதோடு அதை தண்டனை சங்களுக்கு முன் கொண்டு வராமல் தடுத்து விடுவதாக தலைமை நீதிபதி கூறினார். இதனால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், அடிப்படை உரிமைகளைத் தாங்குபவர் தனிநபரே என்றும், சமூக மேலாதிக்க ஒழுக்கத்தால் அரசியலமைப்பு உரிமைகளை நீர்த்துப்போகச் செய்ய முடியாது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chief justice of india, CJI