பா.ஜ.க-வினரை கைது செய்ய உத்தரவிட்ட போலீஸ் கமிஷனர் திடீர் ராஜினாமா

காவல்துறை அதிகாரியாக இருந்த கபீர் கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த ஜனவரி 21-ம் தேதி அன்று நடைபெற்ற பேரணி ஒன்றில் `கோலி மாரோ’ என்று முழக்கமிட்ட மூன்று பா.ஜ.க-வினரை வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரியாக இருந்த கபீர் கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த ஜனவரி 21-ம் தேதி அன்று நடைபெற்ற பேரணி ஒன்றில் `கோலி மாரோ’ என்று முழக்கமிட்ட மூன்று பா.ஜ.க-வினரை வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 • Share this:
  மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பேரணி ஒன்றில் ` கோலி மாரா (துரோகிகளை சுடுங்கள்)’ என்று முழக்கமிட்ட பா.ஜ.க-வினரைக் கைது செய்ய உத்தரவிட்ட காவல் ஆணையர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அருகே உள்ள சந்தன் நகர் பகுதியின் கமிஷனராக இருக்கும் ஹூமாயுன் கபீர் (Humayun Kabir) தனிப்பட்ட காரணங்களைக் கூறி பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  காவல்துறை அதிகாரியாக இருந்த கபீர் கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த ஜனவரி 21-ம் தேதி அன்று நடைபெற்ற பேரணி ஒன்றில் `கோலி மாரோ’ என்று முழக்கமிட்ட மூன்று பா.ஜ.க-வினரை வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் உள்ளூர் பா.ஜ.க தலைவரான சுரேஷ் ஷா மற்றும் பேரணியில் கலந்துகொண்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  பா.ஜ.க தலைவர்களான சுவேந்து ஆதிகாரி மற்றும் ஹூக்லி பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் லாக்கெட் சட்டர்ஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவேந்து ஆதிகாரி, மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர். இவர் கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய் இந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது, ``முற்றிலும் காவல்துறையை சம்பந்தப்பட்ட விஷயம் இது. கட்சிக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். பா.ஜ.க-வினர் பேரணி நடத்துவதற்கு ஒரு நாளுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த நபர்கள் வன்முறையை தூண்டும் விதமாக முழக்கங்களை எழுப்பியதாகவும் அவர்களை கைது செய்யாமல் பா.ஜ.க-வினரை மட்டும் கைது செய்ததால் இந்த சம்பவம் தொடர்பாக கேள்விகள் எழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பா.ஜ.க-வைச் சேர்ந்த திலீப் கோஷ் இந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது, ``தேர்தல் ஆணையத்திடம் காவல்துறை அதிகாரிகளின் பாகுபாட்டை கவனிக்கும்படி கூறினேன். கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதற்கு காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், சந்தன் நகரில் முழக்கமிட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை தூண்டும் கோஷங்கள் எந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடாது. இதுபோன்றவற்றை கட்டுப்படுத்துவதில் அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Ram Sankar
  First published: