’குழந்தைகள் எதிர்பார்ப்பாங்க’ ஆண்டுதோறும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்!

மாதிரி படம்

‘கரீம் சையத் பிரியாணி’ என்ற ரெஸ்ட்ராண்டை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார்

  • Share this:
கேரளாவில் பக்ரீக் நாளான்று ஆண்டுதோறும் ஆதரவற்ற குழந்தைகள் 70 பேருக்கு இஸ்லாமியர் ஒருவர் உணவளித்து வருகிறார்.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் புதன்கிழமையன்று தியாகத் திருநாளாக போற்றப்படும் ’பக்ரீத்’ -ஐ வெகு சிறப்பாக கொண்டாடினர். ஏழை எளியோருக்கு உணவளித்தும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்தும், தியாகத் திருநாளை நிறைவு செய்தனர். கேரளாவைச் சேர்ந்த கரீம் என்ற இஸ்லாமியரும் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து கொண்டாடியிருந்தாலும், ஆண்டுதோறும் அதனை தவறாமல் அவர் செய்து வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரள மாநிலம் மட்டஞ்சேரியில் வசித்து வரும் கரீம் சையத், அப்பகுதியில் ‘கரீம் சையத் பிரியாணி’ என்ற ரெஸ்ட்ராண்டை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். பாரம்பரிய கொச்சின் பிரியாணி தயாரிப்பில் கைதேர்ந்தவரான கரீம் சையத்தின் கடையில், இந்த பிரியாணி ஸ்பெஷலான ஒன்று. ‘டேஸ்டி கேட்டர்ஸ்’(Tasty Caterers) என்ற நிறுவனத்தின் மூலம் கேட்டரிங் சர்வீஸூம் செய்து வருகிறார்.

Also Read:  கொடைக்கானலில் கிளைமேட்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனாலும் புலம்பும் சுற்றுலா பயணிகள்..!

ஆண்டுதோறும் பக்ரீத் நாளன்று கடைகளுக்கு விடுமுறை விட்டு விடும் அவர், அந்த நாளில் பணையப்பள்ளியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதேபோல், இந்த ஆண்டும் பணையப்பள்ளி ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பக்கத்தில் இருக்கும் 70 பேருக்கு சுவையான பிரியாணி பரிமாறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய கரீம் சையத்தின் மகன் ஜமீல், ஆண்டுதோறும் ஆதரவற்ற குழந்தைகள் தங்களை பக்ரீத் நாளன்று எதிர்பார்ப்பார்கள் என்பதால், அவர்களுக்கு உணவளிப்பதை தவறாமல் செய்து வருவதாக கூறியுள்ளார். பக்ரீத் நாள் மட்டுமல்லாது மற்ற சமயங்களிலும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவதை பழக்கமாக வைத்திருப்பதாக தெரிவித்தார்.

Also Read:  போன் இல்லாமல் கம்ப்யூட்டரில் இருத்து SMS செய்வது எப்படி? இதோ வழிகள்!

கேரள வெள்ளம், கொரோனா வைரஸ் போன்ற நெருக்கடியான காலங்களில் உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற அளவில் உணவு சமைத்து வழங்கதாக ஜமீல் சையத் தெரிவித்தார். தவறாமல் செய்து வரும் இந்த பணி மக்களின் கவனத்தை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

கொச்சின் பாரம்பரிய பிரியாணி வழக்கொழிந்துவிட்டதாக கூறும் அவர், தங்கள் கடையில் அந்த பிரியாணி ஸ்பெஷல் எனத் தெரிவித்துள்ளார். தனது தந்தை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியாணி கடை நடத்தி வருவதாக கூறிய ஜமீல், அண்மையில் தெவாரா பகுதியில் புதிய கடை ஒன்று திறந்திருப்பதாக கூறியுள்ளார். எர்ணாக்குளத்தில் இருக்கும் பெரும்பாலான பிரியாணிக் கடைகளில் பாரம்பரிய பிரியாணிகள் இல்லை எனவும் கூறினார்.

Also Read: நாகப் பாம்புக்கே தண்ணிகாட்டிய பூனையின் அசாத்திய துணிச்சல்.. மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

தெவாரா பகுதியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் ரெஸ்ட்ராண்டை ஜமீலின் தந்தையான கரீம் சையத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கவனித்து வருகின்றனர். உணவின்றி தவிப்பவர்களுக்கு தொடர்ந்து உணவளித்தும் வரும் கரீம் சையத்தை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல், ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் உஸ்மான் என்பவர் ஆதரவற்றவர்களுக்கு பசியாற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ‘பசிக்கு மதமில்லை’(‘Hunger Has No Religion) என்ற முழக்கத்தின் கீழ் அவர் மேற்கொள்ளும் சமூகசேவையை பாராட்டி இங்கிலாந்து அரசு சையத் உஸ்மானை கவரவித்துள்ளது. நாள்தோறும் 1,500 பேருக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
Published by:Arun
First published: