ஹோம் /நியூஸ் /இந்தியா /

டிக்டாக்கில் ஆக்டிவாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் கும்பல்... வங்கதேச இளம்பெண் வீடியோ விவகாரத்தில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

டிக்டாக்கில் ஆக்டிவாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் கும்பல்... வங்கதேச இளம்பெண் வீடியோ விவகாரத்தில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த கும்பல் இந்தியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறித்தும் இவர்களின் நெட்வொர்க் என்ன யார் இவர்களுக்கு மூளையாக செயல்படுவது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்யும் வீடியோ ஒன்று வடஇந்தியாவில் சமூகவலைதளத்தில் பரவியது. குறிப்பாக அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் இந்த வீடியோவானது சுற்றி வந்தது. இதனையடுத்து இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த நபர்கள் குறித்த விசாரணையில் அசாம் காவல்துறை இறங்கியது. குற்றவாளிகளை அடையாளம் கண்ட போலீஸார் அவர்களின் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட மொபைல் எண்ணை அசாம் போலீஸார் கண்டுபடித்தனர். மொபைல் போனின் நெட்வொர்கை ஆய்வு செய்ததில் அந்த எண்ணானது பெங்களூரு பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெங்களூரு போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

  ஸ்பெஷல் டீம் அந்த எண்ணை ட்ரேஸ் செய்தது.அதிகாலையில் அந்த கும்பலை சுற்றி வளைத்த போலீஸார் அங்கிருந்த சாகர், முகமது பாபா சேக், ரிடோய் பாபு, ஹகில் மற்றும் ஒரு பெண் ஆகிய 5 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.  இதில் இருவர் தப்பியோட முயன்ற நிலையில் அவர்களை போலீஸார் சுட்டு பிடித்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்தது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணும் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. வங்கதேசத்தில் இருந்து அந்த பெண்ணை கடத்தி வந்துள்ளனர்.

  இந்தியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி அந்தப்பெண்ணை கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் இந்த கும்பலுக்கு முகமது பாபா சேக் என்பவர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இவர்களுக்கும் பொருளாதார ரீதியிலான பிரச்னை இருந்துள்ளது. சமாதானம் பேச அழைத்துள்ளனர். அப்போது தான் அந்தப்பெண்ணை நான்குபேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

  Also Read: மகளின் காதலனை கொன்று புதைத்த தந்தை- ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

  இந்த வழக்கை பெங்களூரு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தனது நண்பருடன் தங்கியிருப்பது குறித்து பெங்களூரு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கேரளாவுக்கு விரைந்த காவல்துறையினர் அந்தப்பெண்ணை பெங்களூரு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அந்தப்பெண்னுக்கு முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் அந்தப்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த நபரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கும்பல் இந்தியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறித்தும் இவர்களின் நெட்வொர்க் என்ன யார் இவர்களுக்கு மூளையாக செயல்படுவது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

  இந்தசம்பவம் குறித்து பேசிய பெங்களூரு காவல்துறை அதிகாரிகள், “ இந்தப் பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முகமது பாபு ஷேக் என்பவரால் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டுள்ளார். பெங்களூருவுக்கு வருவதற்கு முன்பு துபாய் மற்றும் மும்பையில் இந்தப்பெண் பணியாற்றி வந்துள்ளார். ஷேக் என்பவருடன் இந்த பெண்ணுக்கு பொருளாதார ரீதியிலாக எதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெங்களூருவில் இருந்து அந்தப்பெண் கோழிக்கோடு பகுதிக்கு சென்று தங்கியுள்ளார். அவரை சமாதானப்படுத்திய ஷேக் பெங்களூருவுக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து அவரை கொடுமைப்படுத்தி அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.” என்றார்.

  Also Read: கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் தூக்கி எறியும் அதிர்ச்சி வீடியோ!

  டிக்டாக்கில் நேரத்தை செலவிடும் பெண்களை குறிவைத்து இந்த கும்பல் செயல்பட்டு வருவதாக வங்கதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு உட்பட்ட தேஜ்கான் டிவிஷன் காவல் ஆணையர் ஷாகித்துல்லா (Md Shahidullah) செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். பெங்களூரு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ஹிரிடோய்( வயது 26) டிக்டாக்கில் இருக்கும் பெண்களை தொடர்புகொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும். வங்கதேசத்தில் தென்கிழக்கும் மாநிலங்களில் இந்த கும்பல் இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஹிரிடோய் டாக்காவை சேர்ந்தவர் என்பதை வங்கதேச போலீஸார் உறுதி செய்துள்ளனர். அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். எங்களுடைய மகளை எப்படியாவது அழைத்து வாருங்கள். அவள் வேறொரு நாட்டில் இருப்பதை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

  வங்கதேச பத்திரிகைகளில் வெளியான செய்திகளின்படி, “ அந்தப்பெண்ணுக்கு 7 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. அவருக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. அவரது கணவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த ஹிரிடோய் அந்த பெண்ணின் கணவரின் நண்பர் எனக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளார். அந்தப்பெண்ணின் குடும்பத்தினர் மறுத்தநிலையில் இவர் தான் அந்த நபரின் பேச்சை நம்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்களிடமும் பாஸ்போர்ட் அல்லது விசா போன்ற உரிய ஆவணங்கள் இல்லை.

  இந்த வழக்கை இந்தியா அதன்வழியில் விசாரிக்கும். நாங்கள் எங்கள் வழியில் விசாரிப்போம். அவர்கள் வங்கதேசத்தினர் என்பதால் அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தேஜ்கான் டிவிஷன் காவல் ஆணையர் ஷாகித்துல்லா கூறியுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Arrest, Bangladesh, Crime | குற்றச் செய்திகள், Police, Sexual harassment, Violence against women