முகப்பு /செய்தி /இந்தியா / எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...? நேர வழிகாட்டுதல் வெளியீடு

எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...? நேர வழிகாட்டுதல் வெளியீடு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கான நேர வழிகாட்டுதல்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

  • Last Updated :

ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தி வருகின்றன. மேலும் நீண்ட நேரம் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் அமர்வது காரணமாக, அவர்களுக்கு மன நலன் மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  நாளொன்றுக்கு மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும் என வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மழலையர் வகுப்புகளுக்கு நாளொன்றுக்கு 30 நிமிடங்களும், 1 முதல் 8 ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு 2 பாட வேளைகளையும் நடத்த வேண்டும்.

9 முதல் 12ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு 4 பாடவேளைகளும் நடத்த வேண்டும் எனவும் வழிகாட்டு விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Also read... காவல் நிலையத்தில் சாவி தேடும் பைக் உரிமையாளர்கள் - எல்லா இடத்திலும் இதே நிலையா?

ஏற்கனவே தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்புடன்  இணைந்து  நெறிமுறைகளை தயாரித்து வெளியிட்டு இருந்தது.


படிக்க: BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

படிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்


top videos

    இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Online class