மனித உயிரின் விலை வெறும் ₹5 லட்சமா? கெஜ்ரிவாலை விளாசிய கம்பீர்!

#GautamGambhir slams #ArvindKejriwal | தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். #KarolBaghFire

Web Desk | news18
Updated: February 12, 2019, 9:13 PM IST
மனித உயிரின் விலை வெறும் ₹5 லட்சமா? கெஜ்ரிவாலை விளாசிய கம்பீர்!
கவுதம் கம்பீர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால்.
Web Desk | news18
Updated: February 12, 2019, 9:13 PM IST
டெல்லி கரோல் பாக் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு வெறும் ₹5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் கெஜ்ரிவாலை முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள முக்கியமான இடமான கரோல் பாக் பகுதியில் நட்சத்திர விடுதியில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி முதற்கட்டமாக 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அதன்பின், பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Karol Bagh Fire, கரோல் பாக் தீ விபத்து
கரோல் பாக் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து. (Twitter)


இதனை அடுத்து, தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்நிலையில், ரூ.5 லட்சம் என்பது குறைவான தொகை என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.கம்பீர் தனது ட்விட்டரில், “மனித உயிரின் மதிப்பு ரூ.5 லட்சத்தை விட அதிகமானது. சாதாரண மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த இழப்பீடு என்பது சிறிய தொகையாக உள்ளது. டெல்லிக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அது ஒரு முறையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா சாலை விபத்தில் மரணமா? வெளியானது உண்மை நிலவரம்!

Also Watch..

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...