முகப்பு /செய்தி /இந்தியா / ரெய்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய கிராம வளர்ச்சித்துறை அதிகாரி

ரெய்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய கிராம வளர்ச்சித்துறை அதிகாரி

பீகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

பீகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ரெய்டில் சிக்கிய அதிகாரிக்கு கீழ் வேலை செய்யும் அலுவலர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு துப்பு தந்துள்ளனர்.

  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநிலத்தில் கிராம வளர்ச்சித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் பகுதியில் கிராம மேம்பாட்டுத்துறையில் செயல் பொறியாளராக இருப்பவர் சஞ்சய் குமார் ராய்.

இவர் பெருமளவில் லஞ்சம் வாங்கும் ஊழல் பேர்வழி என்ற தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு சஞ்சய் குமாருக்கு கீழ் வேலை செய்யும் அலுவலர்கள் மூலம் தெரியவந்தது. தனக்கு கிடைத்த துப்பின் பேரின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சஞ்சய் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.2,000 மற்றும் ரூ.500 மதிப்பிலான நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரெய்டுக்கு வந்த அதிகாரிகளே மிரண்டு போகும் அளவிற்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டு அதை எண்ணிய அதிகாரிகள் அவர் வீட்டில் மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர்.

பணத்துடன் சேர்த்து பல லட்சம் மதிப்பாலான நகைகள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் அங்கு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுஜித் சாகர் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் சஞ்சய் குமார் அளித்த தகவில் தொடர்புடைய அவருக்கு தொடர்புடைய சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.

top videos
    First published:

    Tags: Bihar, Vigilance officers