கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் உகாதி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய ஆந்திர மக்கள்

ஆந்திராவில் வரட்டிகளை வீசியெறிந்த கிராம மக்கள்

ஆந்திர மாநிலம் கர்னூலில், பக்தர்கள் வரட்டியால் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.

 • Share this:
  தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமான உகாதி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத அமாவாசைக்குப் பின் உகாதி வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்ததுடன், வேம்பு - வெல்லக் கலவையை உறவினர்களுக்கு கொடுத்து மக்கள் கொண்டாடினர். குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இந்த பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

  இதனிடையே இந்த திருநாளை அடுத்து ஆந்திர மாநிலம் கர்னூலில், பக்தர்கள் வரட்டியால் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது. கர்னூல் மாவட்டம் கயிறுபள்ள கிராமத்தில் உள்ள வீரபத்திர சுவாமி கோயிலில் ஆண்டு தோறும், வரட்டியால் பக்தர்கள் தாக்கிக் கொள்ளும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

  இந்தாண்டுக்கான திருவிழாவையொட்டி, வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட வரட்டிகள் சுவாமிக்கு படைக்கப்பட்டன. பின்னர், இரண்டு குழுக்களாக பிரிந்து கொண்ட பக்தர்கள், வரட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்தனர்.

   

      

  தொடர்ந்து சமரசம் அடைந்த இரு குழுவினரும், வீரபத்திர சாமிக்கும், பத்திரகாளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தினர். இத்திருவிழாவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர். இதில் கலந்து கொண்ட பலரும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காது, முகக்கவசம் அணியாது ஒன்றாக கூடி விளையாடி மகிழ்ந்தனர்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: