ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆந்திராவில் காவல்நிலையத்தில் வெடிவிபத்து... பறிமுதல் செய்து வைத்திருந்த வாகனங்கள் தீக்கிரையாகின

ஆந்திராவில் காவல்நிலையத்தில் வெடிவிபத்து... பறிமுதல் செய்து வைத்திருந்த வாகனங்கள் தீக்கிரையாகின

ஆந்திரா காவல் நிலையத்தில் பெரும் வெடிவிபத்து

ஆந்திரா காவல் நிலையத்தில் பெரும் வெடிவிபத்து

காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருந்த ஓப்பியம் போதைப் பொருள் வெடித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chittoor, India

  ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கங்காதர நெல்லூர் என்ற பகுதி உள்ளது. இப்பகுதி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.

  இந்த வெடி விபத்தில் காவல் நிலையத்தின் கதவு, ஜன்னல்கள் ஆகியவை நொறுங்கி தூள் தூளாகின. மேலும், காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், கார் ஆகியவை கடும் சேதமடைந்தன. காவல்நிலையத்தில் இரவு பணியில் இரு காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்த விபத்தில் கண்ணாடிகள் விழுந்ததில் காவலர் ஆஞ்சனேயா ரெட்டி என்பவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

  வெடி விபத்து பற்றி தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.முதலில் யாரோ சதித்திட்டத்துடன் நாட்டு வெடிகுண்டை வீசி சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது.

  பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில் 2018 ஆம் ஆண்டில் இந்த காவல் நிலையத்தில் 713 கிலோ ஓப்பியம் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின்: அதிரடி சோதனையில் சிக்கியது - 6 பேர் கைது

  இவைகள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட நிலையில், 250 கிராம் அளவிலான ஓப்பியத்தை மட்டும் சோதனை மாதிரியாக காவல்நிலையத்தில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தான் தற்போது வெடித்துள்ளதாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவயிடத்தில் பெரிய குழியே உருவாகியுள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

  Published by:Kannan V
  First published:

  Tags: Andhra Pradesh, Blast, Police station