முகப்பு /செய்தி /இந்தியா / ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சர்ச்சையான விளம்பரம் - மன்னிப்பு கோரியது Zomato நிறுவனம்..

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சர்ச்சையான விளம்பரம் - மன்னிப்பு கோரியது Zomato நிறுவனம்..

zomato

zomato

Zomato Apologises Over Hrithik Roshans' 'Mahakal Thali' Ad : உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோ வெளியிட்ட விளம்பரப் படம் சர்ச்சைக்குள்ளானதாக மாறிய நிலையில் அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh | Tamil Nadu

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான Zomato நிறுவன  விளம்பரமானது பிரபல மஹாகாலேஷ்வர் கோவிலை அவமதிப்பதாக உள்ளது என்று இணையத்தில் நெட்டிசன்கள் ஜொமேட்டோ நிறுவனத்தை புறக்கணிக்கும் விதமாக  ஹேஷ்டேக் ஒன்றை  ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோ  ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ஹிருத்திக் ரோஷன் மகாகல் என்ற இடத்திலிருந்து தளி என்ற உணவை ஆர்டர் செய்வார். இந்த விளம்பரத்தில் அவர் உணவு ஆர்டர் செய்த மகாகல் என்ற இடம் மஹாகாலேஷ்வர் கோவிலைக் குறிக்கிறது என்று மஹாகாலேஷ்வர் கோவில் மதகுருக்கள் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோவிலில் கொடுக்கப்படும் உணவு பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவது. அதை எப்படி ஆன்லைன் டெலிவரி ஆப் மூலம் வாங்க முடியும்? இது மகாகல் கோவிலை அவமதிக்கும் செயல் என  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் உடனடியாக அந்த விளம்பரத்தை அகற்றக் கோரியும் இந்த செயல் குறித்து ஜொமேட்டோ நிறுவனத்தை மன்னிப்பு கேட்க கோரியும் மகாகல் கோவில் மதகுருக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உஜ்ஜயினி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங்விடம் ஜொமேட்டோ நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

அதே சமயம் இணையத்தில் இந்த குறிப்பிட்ட விளம்பரத்திற்கு எதிர்ப்பு அதிகமாகக் கிளம்பியுள்ளது. இது இந்து கோவிலை அவமதிப்பதாக உள்ளது என்று நெட்டிசன்கள் ஜொமேட்டோ நிறுவனத்தைப் புறக்கணிக்கும் விதமாக boycott zomato ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் மகாகல் என்று உஜ்ஜயினி பகுதியில் ஒரு உணவகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வங்க புலியின் சிற்பம்.. கைவினை கலைஞர் அசத்தல்

இது குறித்து ஜொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விளம்பரத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த விளம்பரம் மகாகல் கோவிலைக் குறித்து எடுக்கவில்லை என்றும் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் என்ற உணவகம் குறித்தே எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் ஜொமேட்டோ புறக்கணிப்பு  ட்ரெண்டான நிலையில் அந்த விளம்பரத்தை  விலக்கிக்கொள்வதாகவும் அறிவித்துள்ளனர். இந்த விளம்பரம் யாருடைய நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகள் புண்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டது இல்லை என்று ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Advertisement, Zomato