எதிர்காலத்தில் பேசும் கம்ப்யூட்டர்கள் சமஸ்கிருதத்தாலேயே சாத்தியம் என்று நாசா கூறுகிறது - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்

எதிர்காலத்தில் பேசும் கம்ப்யூட்டர்கள் சமஸ்கிருதத்தாலேயே சாத்தியம் என்று நாசா கூறுகிறது - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
  • News18
  • Last Updated: August 11, 2019, 2:09 PM IST
  • Share this:
உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

மும்பை ஐஐடியில் நடந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “உலகின் ஒரே அறிவியல்மொழி சமஸ்கிருதம் தான். அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. எதிர்காலத்தில் பேசும் கம்ப்யூட்டர்கள் வரும் பட்சத்தில் அது சமஸ்கிருதத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனெனில் சமஸ்கிருதம் ஒரு விஞ்ஞான மொழியாகும். அதில் உள்ள சொற்கள் பேசப்படும் விதத்தில் சரியாக எழுதப்படுகின்றன” என்று கூறினார்.

மேலும், “இன்று உலகமெங்கும் துவங்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் ஆயுர் வேத மருத்துவத்துடன் தான் தங்கள்பணியை துவக்குகின்றன. ஆயுர்வேதம் இல்லாமல் சிகிச்சை முழுமையடையாது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் இந்தியாவில் இருந்து தான் வந்துள்ளார்.


தற்போது ஜப்பான்சீன தயாரிப்புகளையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி இனி வரும் காலங்களில் உலகில் உள்ள அனைவரும் இந்திய தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தும் நிலையை உருவாக்குவோம் என்பதை உறுதி செய்வோம்” என்று கூறினார்.

First published: August 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்