பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து! 13 பேர் காயம்

Poorva Express Derail Near Kanpur | நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்.

news18
Updated: April 20, 2019, 10:08 AM IST
பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து! 13 பேர் காயம்
தடம் புரண்ட ரயில்
news18
Updated: April 20, 2019, 10:08 AM IST
மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து புதுடெல்லி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் இன்று அதிகாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை இன்று அதிகாலை ஒரு மணிக்கு ரயில் அடைந்தது.


அப்போது ரயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்.


தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Loading...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also See..

First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...