Corona Virus | கொரோனா வைரஸ் தானாகவே அழிய இதோ வழி...

மாதிரிப் படம்

கொரோனா தானாகவே அழிவதற்கு ஒவ்வொரு மக்களிடமும் வழி உள்ளது. அதனை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய கோரத்தாண்டவத்தை ஆடிவருகிறது. இந்தியாவில் உலகில் இல்லாத உச்சமாக நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். தற்போது அந்த பாதிப்பு 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், கொரோனாவால் உயிரிழப்பிவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 4,500-க்கும் அதிகமாக ஏற்பட்டுவருகிறது.

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களிடன் ஒத்துழைப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்துவருகிறது. கொரோனா வைரஸ் தானாக அழிவதற்கு ஒவ்வொரு தனி நபரிடம் வாய்ப்பு உள்ளது. கொரோனாவை அழிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும். ஆனால், அதை நம் உறுதியான நடவடிக்கைகளின் மூலம்தான் சாதிக்க முடியும்... அதன் வழிமுறைகளைப் பார்ப்போம்..

    கொரோனா வைரஸ் தானாக இடம் பெயர்வதில்லை... மாறாக, மனிதர்கள்தான் அதை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு கொண்டு சென்று பரப்புகின்றனர்..

    நாம் தேவையின்றி நடப்பதை தவிர்த்துக்கொண்டால் வைரஸ் தானாகவே வழியற்று போகும்... புரிந்துகொள்ள இது எவ்வளவு எளிது..! ஆனால், செயல்படுத்துவது நம்முடைய கையில்தான் உள்ளது...

    மக்களே... சிந்தித்து பொறுப்புடன் செயல்படுவோம்... கொரோனா பரவலைத் தடுத்து முற்றிலுமாக அழித்தொழிப்போம்....



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: