உங்கள் PF கணக்கில் உள்ள பேலன்ஸை எப்படி செக் செய்வது தெரியுமா?

உங்கள் PF கணக்கில் உள்ள பேலன்ஸை எப்படி செக் செய்வது தெரியுமா?

கோப்புப் படம்

உங்கள் அக்கவுன்ட் ஸ்டேட்டஸ் மற்றும் ஆன்லைனில் பேலன்ஸை சரிபார்க்க, ஈபிஎப்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான (EPFC’s official website) www.epfindia.gov.in ஐப் பார்வையிடவும்.

  • Share this:
தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் EPF எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதியை (Employee Provident fund) வழங்கும். பொதுவாக இது மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஒருவருக்கு சம்பளத்தில் ரூ.2000 பிடித்தம் செய்யப்பட்டால் அதே அளவு பணத்தை நிறுவனத்தின் உரிமையாளரும் டெபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு சிறுகச்சிறுக சேமிக்கப்பட்ட நிதி அந்த தொழிலாளருக்கு ஓய்வூதிய நிதியாகக் கிடைக்கும். 

வயதான காலத்தில் இந்த பணத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employee Provident fund) என்பது கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும் (mandatory retirement savings scheme), இது வரி இல்லாத வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டம் 1952ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த திட்டத்தில் தொழிலாளர் மற்றும் உரிமையாளர் இருவரும் இந்த திட்டத்திற்கு சமமான தொகையை வழங்குகிறார்கள். 

வருங்கால வைப்பு நிதி (Provident Fund (PF)) கணக்கில் சேகரிக்கப்பட்ட பணம் நீங்கள் ஓய்வுபெறும் நேரத்தில் அல்லது வேலையை மாற்றும்போது (Retirement or when you change jobs) மட்டுமே உங்களால் பெற முடியும். தற்போதைய விதிகளின்படி, ஒரு நபர் ஒரு மாதத்திற்கு வேலையில்லாமல் இருந்தால் 75 சதவீதம் ஈபிஎஃப் கார்பஸை (EPF corpus) திரும்பப் பெற முடியும். வேலையின்மை இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்தால் மீதமுள்ள 25 சதவீதத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். 

ஒருவர் யுமாங் ஆப்பின் (Umang app) மூலம், SMS வழியாக, ஈபிஎஃப்ஒ இணையதளம் (EPFO website) மற்றும் மிஸ்டு கால் (Missed call) அளிப்பதன் மூலம்  ஈபிஎஃப் பேலன்ஸை (EPF balance) சரிபார்க்க முடியும். யுமாங் ஆப்ஸ் (Umang app) பலவிதமான அரசு வசதிகளுக்கான அணுகலை (Access) உங்களுக்கு வழங்குகிறது. இந்த ஆப்ஸைப் பயன்படுத்தும் போது ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஈபிஎஃப் பாஸ் புத்தகத்தை சரிபார்க்கலாம், கிளைம்களை உயர்த்தலாம் அல்லது கண்காணிக்கலாம் (EPF passbook, raise or track claims). இந்த செயலை தொடங்க, உங்கள் மொபைலில் ஆப்ஸை முதலில் இன்ஸ்டால் செய்யவும். 

பின்னர் ஆப்ஸை திறந்த பிறகு EPFO ஐத் தேர்ந்தெடுத்து, 'பணியாளர் மைய சேவைகள்' (‘Employee Centric Services’) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் UAN ஐடி மற்றும் பாஸ்வர்ட்டை உள்ளிடவும்.  இப்போது உங்கள் பேலன்ஸை சரிபார்க்க 'பாஸ்புக்கைக் காண்க' (‘View passbook’) என்பதைத் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பரை (UAN) உள்ளிட்டு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTPயை உள்ளிடவும்.

பின்னர்  OTP ஐ உள்ளிட்டு உள்நுழையவும். உங்கள் நிறுவனத்தின் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து (selecting the member ID of your company) இப்போது உங்கள் ஈபிஎஃப் பேலன்ஸைக் பார்க்கலாம். 

உங்கள் அக்கவுன்ட் ஸ்டேட்டஸ் மற்றும் ஆன்லைனில் பேலன்ஸை சரிபார்க்க, ஈபிஎப்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான (EPFC’s official website) www.epfindia.gov.in ஐப் பார்வையிடவும். 'எங்கள் சேவைகள்' என்பதற்குச் சென்று, 'ஊழியர்களுக்காக' (‘Our Services’ and select ‘For Employees’) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் வேறொரு பக்கத்திற்கு செல்வீர்கள், இப்போது 'உறுப்பினர் பாஸ் புக்' ( ‘Member Passbook’) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள். 

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீங்கள் உள்நுழைந்ததும், PFக்கான உங்களின் பங்களிப்புடன் உங்கள் உரிமையாளரின் பங்களிப்பை சரிபார்க்க தற்போதைய உரிமையாளரின் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும். SMS வழியாக உங்கள் பேலன்ஸை சரிபார்க்க விரும்பினால், உங்கள் UAN எண்ணுடன் உங்கள் ஆதார், பான் கார்டு அல்லது உங்கள் வங்கிக் கணக்கை (Aadhaar, PAN Card or your bank account) இணைத்த பின், EPFCHO UAN ENG என்று டைப் செய்து 738299899 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள், அங்கு கடைசி மூன்று எழுத்துக்கள் 'ENG' உங்களுக்கு விருப்பமான மொழிக்கு அங்கு தமிழுக்கு 'TAM' என்று டைப் செய்யலாம். 

இந்த SMS  வசதியை ஆங்கிலம், மராத்தி, பெங்காலி, இந்தி, குஜராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் போன்ற பல்வேறு மொழிகளில் அணுகலாம். பதிவுசெய்த பயனர்கள் PF கணக்கின் விவரங்களை SMS வழியாக பெற 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். Missed call அழைப்பு முறையை அனைவரும் விரும்புகிறார்கள். ஏனென்றால், EPF பேலன்ஸை அறிந்து கொள்ள இது எளிதாக இருப்பதுதான். 

மற்ற மொபைல் ஆப்ஸ் அல்லது வெப் சைட்களை விட இந்த SMS சேவை சிறந்தது. இதற்கு ஸ்மார்ட்போன் தேவையில்லை. எந்தவொரு தொலைபேசியிலிருந்தும் நீங்கள் Missed call அழைப்பு முறையை மேற்கொள்ளலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: