இந்திய ரயில்வே வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. தொலைதூரங்களுக்கு செல்லும் பயணிகள், குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் ஓய்வெடுக்க வசதியாக ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக ஓய்வறைகள் உள்ளன. அதில் சிங்கிள், டபுள், ஏசி மற்றும் ஏசி அல்லாத அறைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள அறைகளுக்கு ஏற்ப, பயணிகள் தங்களுக்கு தேவையான அறைகளை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டு வழிகளிலும் புக்கிங் செய்துகொள்ளலாம்.
ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வெடுக்கும் அறைகளை ஆன்லைனில் புக்கிங் செய்வது எப்படி?
Step1. முதலில் IRCTC -ன் டூரிஸம் இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மெயின் மெனுவில் ஓய்வெடுக்கும் அறை (Retiring Rooms) என்ற ஐகானை தேர்தெடுக்க வேண்டும்.
https://www.rr.irctctourism.com/#/accommodation/in/ACBooklogin
Step 2: பின்னர், ஐ.ஆர்.சி.டி.சி LOG IN -ல் உங்களின் லாகின் தகவலை கொடுத்து உள் நுழைய வேண்டும்
Step 3: அங்கு உங்களின் PNR எண்ணை பதிவிட்டு தகவலை தேட (search) வேண்டும்
Step 4: அதில், நீங்கள் எந்த ரயில் நிலையத்தில் ஓய்வெடுக்க விரும்புகிறீர்களோ அந்த ரயில் நிலையத்தை தேர்தெடுக்க வேண்டும்.
Step 5: பின்னர் ரயில் நிலையத்தில் ஓய்வெடுக்கும் தேதி, வெளியேறும் தேதியை பதிவு செய்து, உங்களுக்கு தேவையான ரூம் வகையையும் தேர்தெடுக்க வேண்டும்.
Step 6: பிறகு Check Availability ஐகான் மீது கிளிக் செய்தால், அந்த ரயில் நிலையத்தில் காலியாக இருக்கும் ஓய்வறைகள் குறித்த தகவல் வரும். ஒருவேளை கோவிட் காரணமாக மூடப்பட்டிருந்தாலும், அந்த தகவலும் இடம்பெறும்.
Also read... தங்க நகைக்கடன்களுக்கு மிகக் குறைந்த வட்டியை வசூலிக்கும் ஐந்து வங்கிகள்!
Step 7: இருப்பின் அடிப்படையில் ரூம் எண்ணை தேர்வு செய்து, உங்கள் அடையாள அட்டை குறித்த தகவலை பதிவிடுங்கள்.
Step 8: கடைசியாக ரூம் புக்கிங் செய்ததற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் ஒருவர் ரயில் நிலையத்தில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் ஓய்வறையை ரத்து செய்ய விரும்பினால், 48 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்து கொள்ளலாம். 48 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால் 10 விழுக்காடு தொகை பிடித்தம் செய்யப்படும். தங்கும் நாளில் ரத்து செய்தால் 50 விழுக்காடு கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதற்குமேல் காலதாமதம் ஏற்பட்டால் கட்டணம் திருப்பித்தரப்படாது. எனவே புக்கிங் செய்வதற்கு முன்னர் உறுதி செய்துவிட்டு மேற்கொள்வது அவசியம்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.