கிறிஸ்துமஸ் விளம்பரத்தை பார்த்து கண்ணீர் விட்ட ஆனந்த் மஹிந்திரா.. நீங்கள் யாருக்காக இவ்வளவு முயற்சி எடுப்பீர்கள்?

கிறிஸ்துமஸ் விளம்பரத்தை பார்த்து கண்ணீர் விட்ட ஆனந்த் மஹிந்திரா.. நீங்கள் யாருக்காக இவ்வளவு முயற்சி எடுப்பீர்கள்?

டிவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு கிறிஸ்துமஸ் விளம்பரத்தைப் பார்த்து தான் கண்ணீர் விட்டதாக மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு கிறிஸ்துமஸ் விளம்பரத்தைப் பார்த்து தான் கண்ணீர் விட்டதாக மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

  • Share this:
மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது தனக்கு பிடித்த, மனதுக்கு நெருக்கமான வீடியோக்களை டிவிட்டரில் பகிர்ந்து நெட்டிசன்கள் கவனத்தை பெறுவார். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவும் நெட்டிசன்களை ஈர்த்துள்ளது. DadsWithDaughters என்ற டிவிட்டர் பக்கத்தில் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஒரு விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஒரு சிறிய மணியைத் தூக்க முடியாமல் முதியவர் தவிக்கிறார். ஆனால், அந்த பெல்லைத் தூக்க வேண்டும் என்ற முனைப்புடன் நாள்தோறும் பயிற்சி எடுக்கிறார். தொடர் பயிற்சி காரணமாக ஒருநாள் அந்த பெல்லை வெற்றிகரமாக தன் கையில் தூக்கிவிடுகிறார். நாள்தோறும் எதற்காக அந்த பயிற்சியை மேற்கொள்கிறார் என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை.

இறுதியாக, தன் மகள் வீட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு செல்லும் அவர், தன் பேத்திக்காக பரிசு ஒன்றை வாங்கிச் செல்கிறார். உடனடியாக, தாத்தா கொண்டுவந்த பரிசுப் பெட்டியை சிறுமி திறந்து பார்க்கும்போது, அதில் கிறிஸ்துமஸ் ஸ்டார் இருக்கும். தாத்தாவின் பரிசை கண்டதும் சிறுமி மகிழ்ச்சியடையும் நிலையில், பேத்தியை தனது இருக்கரங்களால் தூக்கிச் சென்று கிறிஸ்துமஸ் மரத்தின் அருகில் தாத்தா நிற்பார். அப்போது, தன் கையில் இருக்கும் ஸ்டாரை கிறிஸ்துமஸ் மரத்தின் மீது பேத்தி வைப்பார். 

அப்போது, தாத்தா நெகிழ்ச்சியாக கண்கலங்குவார். அத்துடன் விளம்பரமும் நிறைவடையும். அதாவது, கிறிஸ்துமஸ் விழாவில், தன் பேத்தியை தூக்க வேண்டும் என்பதற்காக, நாள்தோறும் பெல்லைத் தூக்கி பயிற்சி எடுத்திருக்கிறார். 3 நிமிடம் இருக்கும் அந்த வீடியோ பார்ப்பவர்களையும் நெகிழச்செய்யும் வகையில் இருக்கிறது. 

இந்த வீடியோவைப் பார்த்தவுடன் கண்கலங்கிவிட்டதாக தெரிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, தனக்கு பேத்தி இல்லை, ஆனால் அந்த சிறுமி வயதுடைய பேரன் இருக்கிறான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  ஆனந்த் மகேந்திரா டிவிட்டரில் ஷேர் செய்த அந்த வீடியோ உடனடியாக வைரலானது. ஏராளமானோர் அந்த வீடியோவை விரும்பி பார்த்ததுடன், நெகிழ்ச்சியாக விளம்பரம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.


ஒரு சிலர் மிகச்சிறப்பாக இருப்பதாகவும், மனதை நெகிழச்செய்யும் வகையில் விளம்பரம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மற்றும் சிலர், Best ever advertisement என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர். இன்னும் சிலர், வீடியோவை பார்த்ததும் ஆனந்த் மகேந்திராவைப்போல் தாங்களும் கண்கலங்கிவிட்டதாக கூறியுள்ளனர். இந்த விளம்பரத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக கண்கலங்காமல் இருக்க மாட்டார்கள், வாழ்க்கையின் மிக அழாகன தருணங்களில் இதுவும் ஒன்று என சில நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடகர் லக்கி அலியின் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், பாடகர் லக்கி அலி, கோவாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்று,  தான் பாடிய ஓ சனம் பாடலை பாடிக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து டிவிட்டரில் எழுதியுள்ள ஆனந்த் மகேந்திரா, அவரின் பாடலை கேட்பது என்பது  என்னைப்போன்றவர்களுக்கு மிகப்பெரிய ஏக்கம் என தெரிவித்துள்ளார்.

முதலில் அந்த வீடியோவை முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான நபீஷா அலி பகிர்ந்திருந்தார். இதனை ஆனந்த் மகேந்திரா ரீ டிவீட் செய்திருந்தார். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த Sunoh திரைப்படம் மூலம் பாடகராக அறிமுகமான லக்கி அலி, அந்தப்படத்தில் ஓ சனம் பாடலை பாடியிருந்தார்.

NTSE தேர்வு ஒரு வாரம் ஒத்திவைப்பு.. தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள அனுமதி..

90s குழந்தைகளின் விருப்பமான பாடகராகவும் அவர் இருந்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: