• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கல்வியின் மீது பெருங்கனவு: தனது திருமணத்தை தடுத்து நிறுத்திய 13 வயது சிறுமி- உ.பியில் இந்தப் பள்ளி மட்டும் சாதிப்பது எப்படி?

கல்வியின் மீது பெருங்கனவு: தனது திருமணத்தை தடுத்து நிறுத்திய 13 வயது சிறுமி- உ.பியில் இந்தப் பள்ளி மட்டும் சாதிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்த பீரித்தி என்ற 13 வயது சிறுமி பள்ளியின் உதவியுடன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

  • Share this:
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள அனூப்ஷாஹரில், ப்ரீதி என்ற பள்ளி மாணவியின் பெற்றோர் சத்தமில்லாமல் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் ப்ரீதியின் தந்தை மட்டும் தான். எனவே இது சிறந்த நேரம் என்று நினைத்த அவர், குடும்பத்திற்காக சிரமப்படுவதை தவிர்க்க இப்படி ஒரு தவறான முடிவை எடுத்துள்ளார். மணமகனின் குடும்பத்தினர் திருமண தேதியை முடிவு செய்ய ப்ரீத்தியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தான் தனது திருமணம் நடத்த முடிவு செய்திருப்பதை ப்ரீத்தி அறிகிறார்.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளக்கூட தன் சகோதரனின் தொலைபேசியை பயன்படுத்தும் ப்ரீத்திக்கு யாரிடமும் உதவி கேட்பது என தெரியவில்லை. ஆகவே, திருமண தேதி முடிவு செய்த மறுநாளே சகோதரனின் தொலைபேசியில் இருந்து தனது பள்ளி ஆசிரியருக்கு அழைப்பு விடுத்தார்.

“எனது பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர், தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை" என்று அவள் ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ப்ரீதியின் ஆசிரியரான மது சர்மா, உடனடியாக அவரது பெற்றோருடன் தொடர்பு கொண்டு, தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று அவர்களை சமாதானப்படுத்தினார். அகையால், தற்சமயம் அவளுடைய திருமணம் குறித்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ப்ரீத்தி இப்போது தனது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு பயின்று வருகிறார். இதனிடையே 15 வயதான ரிங்கி என்ற சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. உடனடியாக பக்கத்து வீட்டு தொலைபேசியிலிருந்து தனது ஆசிரியருக்கு அழைப்பு விடுத்து தகவலை கூறியுள்ளார். பின்பு, ரிங்கியின் ஆசிரியர் உடனடியாக காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுவுடன் தொடர்பு கொண்டு திருமணத்தை நிறுத்தினார். பின்னர் அவரது பெற்றோரை சந்தித்து, 18 வயதை அடைவதற்கு முன்பு தங்கள் மகளை திருமணம் செய்துவைக்க கூடாது என்று கேட்டு கொண்டார். இதேபோல 15 வயதுடைய பிரியான்ஷி என்ற சிறுமியின் திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

13 வயதான ப்ரீத்தி உத்தரபிரதேசத்தில் உள்ள பெண்கள் பள்ளியான பர்தாதா பர்தாடி எஜுகேஷனல் சொசைட்டியின் இன்டர் கல்லூரியில் படித்து வருகிறார். அங்கு 1,500 மாணவிகள் படித்து வரும் நிலையில், அவர்களுக்கு “எப்படி ஒரு பெண்ணியவாதியாக இருக்க வேண்டும்” என்று கற்பிக்கப்படுகிறது. மேலும் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள இப்பள்ளியில் சராசரியாக 940 பேரில் 896 சிறுமிகளுக்கு மோசமான உடல்நலம் மற்றும் குறைந்த கல்வியறிவு விகிதத்திற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேலும் இந்த பள்ளியில் பெண்ணியவாதி குறித்து கற்பிக்கப்பட்டுவதால் இந்த பள்ளியில் உள்ள பெண்கள், வீட்டில் இருப்பவர்களை எதிர்த்து கேள்விகளை கேட்க கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள். "ஏன் எனது சகோதரனை விட எனக்கு குறைவான உணவை வழங்குகிறீர்கள்? "நான் ஏன் படிப்பை நிறுத்த வேண்டும்?" என்றும் கேட்கத் தொடங்கினார்கள். அனூப்ஷாஹாரில் பெண் கல்வியறிவு பரவலாக இல்லை மற்றும் அங்குள்ள பெண்களில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே எட்டாம் வகுப்பை முடித்துள்ளனர்.

தனித்துவமான இப்பள்ளியில் ஒவ்வொரு காலையிலும் வழிபாடு கூட்டத்தில் சிறுமிகள் ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறார்கள். அது என்னவென்றால்,  "நாங்கள் திருமணம் செய்து கொள்வோம், ஆனால் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு" என்பது தான். ஏனென்றால், உத்தரபிரதேச கிராமப்புறத்தில் குறைந்தது 54% பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இலவச கல்வியை வழங்குவதை தவிர, புத்தகங்கள், சீருடை, எழுதுபொருள், சுகாதார வசதிகள், போக்குவரத்து மற்றும் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

6ம் வகுப்பு முதல் உயர் கல்விக்காக வருகை தரும் ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கிற்கும் தினசரி ரூ.10 ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 9ம் வகுப்பிலிருந்து, இந்த தொகை ரூ. 15ஆக உயர்த்தப்படுகிறது. இதுகுறித்து பேசிய பர்தாடா பர்தாடி கல்வி சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேணுகா குப்தா, “இங்கு சிறுமிகள் அனைவரும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்த சலுகைகளை வழங்குகிறோம், எனவே பெற்றோர்கள் தங்கள் மகள்களை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப இது ஒரு உந்துதலாக செயல்படுகிறது ” என்று கூறியுள்ளார்.

அப்பள்ளியின் நுழைவாயிலில், “இன்று உங்கள் மகள்களை நேசித்தீர்களா?” என்று ஒரு முக்கியமான கேள்வியை கேட்கும் வகையில் ஒரு ஓவியம் உள்ளது. பர்தாதா பர்தாடியின் மாணவிகளின் கல்வி சாதனைகளும் குறிப்பிடத்தக்கவை. புலந்த்ஷாஹர் மாவட்டம் மற்றும் உத்தரப்பிரதேசத்தை ஒப்பிடும்போது இந்த பள்ளியில் 85% பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். பள்ளியின் வருகை 82% ஆக உள்ளது.

புலந்த்ஷாஹரில் வழக்கமாக தவறான காரணங்களுக்காகவும், பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகளவில் நடைபெறும். கடந்த மாதம் ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமியை நான்கு ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்தி வெளியிட்டது. அதற்கு சில வாரங்களுக்கு முன்பு, 15 வயது சிறுமி தனது உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது சச்சேரி என்ற கிராமத்தில் 10 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

புலாந்த்ஷாரின் பாதுகாப்பான சில இடங்களில் இப்பள்ளியும் ஒன்றாகும். ஆனால் நோய்தொற்று காலத்திற்குப் பின்னர் அனைத்து சிறுமிகளும் தங்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் அவர்களில் பலர் பாதுகாப்பாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வியைத் தொடங்கின, சில அரசு பள்ளிகளும் அதை பின்பற்றின. இருப்பினும், டிஜிட்டல் இந்தியா இன்னும் ஒரு கனவாக இருக்கும் நம் நாட்டில், பெரிய பகுதிகளுக்கு இது மிக குறைவு மற்றும் இளம்பெண்களின் கடினமான வாழ்க்கையை இது மிகவும் சவாலானதாக மாற்றியுள்ளது. மேலும் பள்ளிப் படிப்புகள் மற்றும் ஆரம்பகால திருமணங்களின் பயம் அதிகமாக ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: