தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் எப்படி தடுப்பூசி கிடைக்கிறது? - டெல்லி துணை முதல்வர் கேள்வி

மணீஷ் சிசோடியா

மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி, கையிருப்பில் இல்லை என்று மத்திய அரசு கூறிவருகிறது.

 • Share this:
  covidமாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை என்று மத்திய அரசு கைவிரிக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் எப்படி தடுப்பூசிகள் கிடைக்கிறது என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

  Also Read: பிரதமர் மோடியை நான் 30 நிமிடங்கள் காக்க வைக்கவில்லை.. அவதூறுகளை பரப்ப வேண்டாம்: மம்தா சாடல்

  இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிகள் ஜூன் மாதம் தான் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி, கையிருப்பில் இல்லை என்று மத்திய அரசு கூறும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி எப்படி கிடைத்து வருகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: