ஹோம் /நியூஸ் /இந்தியா /

வெளிநாட்டு பயணங்கள் மூலம் வெளியுறவுக் கொள்கையை வலுபடுத்திய மோடி- ஒரு அலசல்

வெளிநாட்டு பயணங்கள் மூலம் வெளியுறவுக் கொள்கையை வலுபடுத்திய மோடி- ஒரு அலசல்

மோடி

மோடி

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் எப்போதும் இந்திய அளவில் பேசுபொருளாகவே இருந்துவருகின்றன. அரசியல் விமர்சனங்களைக் கடந்து மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தேவை குறித்து பார்ப்போம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்பே எல்லா தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததன் மூலம் பிற நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் மோடி ஒரு அடியை எடுத்துவைத்தார்.

  பிரதமராக பதவியேற்றது முதல் தற்போதைய ஜப்பான் பயணம் வரை உலக நாடுகளுடன் நட்புறவை புதுப்பித்துக்கொள்வது என்பது பிரதமர் மோடியின் கவனமாக இருந்துவருகிறது. தற்போது உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவின் முன்னெடுப்பையும், திறனையும் ஒப்புக்கொள்கின்றனர்.

  எட்டு ஆண்டுகளில் வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்த மோடி மேற்கொண்ட நடவடிக்கைகள்

  2014-ம் ஆண்டு பதவியேற்பு விழா:

  2014-ம் ஆண்டுவரை பிரதமர் பதவியேற்பு விழாவில் டெல்லியில் பணியாற்றும் வெளிநாட்டுத் தூதர்கள்தான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள். ஆனால், உலக நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டதில்லை. ஆனால், முதன்முறையாக ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கையின் பிரதமர்கள், அதிபர்கள் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டனர். அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் இந்த விழாவில் பங்கேற்றார்.

  மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

  2015-ம் ஆண்டு மங்கோலியா பயணம்:

  2015-ம் ஆண்டுவரை வேறு எந்த பிரதமரும் மங்கோலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதில்லை. மங்கோலியாவில் பேசிய பிரதமர் மோடி, ‘நம்முடைய உறவு என்பது வெறும் வர்த்தகத்தின் அளவு அல்லது மற்றவர்களுடான போட்டியை வைத்து அளவிடப்படுவது அல்ல. நம்முடைய ஆன்ம ரீதியான தொடர்பு மற்றும் லட்சியங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் வரும் நேர்மறையான ஆற்றலின் உறவுகளை அடிப்படையாகக் கொண்டது’ என்று தெரிவித்தார்.

  2015-ம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகள் பயணம்:

  2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டார். கடந்த மூன்று தசாப்தங்களில் அரபு நாடுகளுக்கு இந்திய பிரதமர் மேற்கொண்ட முதல் பயணமாகும். இஸ்லாமிய நாடுக்கு மோடி மேற்கொண்ட முதல் பயணமாகும். 1981-ம் ஆண்டுதான் இந்திரா காந்தி கடைசியாக பயணம் மேற்கொண்டார்.

  2015-ம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் உரை

  பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியத் தலைவர் மோடி. 2015-ம் ஆண்டு அந்த உரையை ஆற்றினார்.

  2017-ம் ஆண்டு இஸ்ரேல் பயணம்

  2017-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமராக இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். அந்த இருநாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அந்தப் பயணம் முக்கியமாக அமைந்தது. அடுத்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை இந்தியாவுக்கு வரவேற்றார்.

  2018-ம் ஆண்டு ராமல்லா பயணம்

  இந்தியாவின் முதல் பிரமராக 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலஸ்தீனத்துக்கு மோடி சென்றார். பாலஸ்தீனத்தின் அதிபரின் அதிகாரப்பூர்வ தலைமையகமான ராமல்லாவுக்குச் சென்றார்.

  2018-ம் ஆண்டு ரூவாண்டா பயணம்

  2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூவாண்டாவுக்கு மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் அதிபர் பவுல் காகேமையும், தொழிலதிபர்களையும், இந்தியர்களையும் சந்தித்து பேசினார்.

  2022-ம் ஆண்டு டென்மார்க் பயணம்

  உக்ரைன் பிரச்னை வெடித்த நேரத்தில் பிரதமர் மோடி டென்மார்க்குக்கு பயணம் செய்தார். கடந்த இரண்டு தசாப்தங்களில் டென்மார்க் சென்ற முதல் பிரதமர் மோடி ஆவர்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Modi