பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்தால், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
பெட்ரோல் வரியை, மாநில அரசு குறைக்க வேண்டும் என்று, மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று மாநில அரசு கூறுகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவிட்டது என்று கூறி அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதை நம் தினமும் பார்த்து வருகிறோம். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கச்சா எண்ணெய் விலை தான். கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல் மட்டும் கிடைப்பது இல்லை.
மேலும் சில பொருட்களும் கிடைக்கின்றன. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்க கூடிய அனைத்து பொருட்களுக்கும் ஒரு விலை உண்டு. ஒரு பேரல் கச்சா எண்ணெய் என்பது 159 லிட்டர். அதாவது ஒரு பேரல் என்று நாம் கூறும் அந்த குடுவைக்குள் 159 லிட்டர் கச்சா எண்ணெய் இருக்கும். இந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யும் போது, 72 லிட்டர் பெட்ரோல், 38 லிட்டர் டீசல், 15 லிட்டர் விமான எரிபொருள், 34 லிட்டர் தார் மற்றும் நாப்தா ஆகியவை கிடைக்கின்றன.
ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 103 டாலர். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 7,828 ரூபாய். பெட்ரோலை பொறுத்தவரை 3 ரகங்கள் உள்ளன. அவற்றில், நாம் பயன்படுத்தும், சாதாரண பெட்ரோல், ஸ்பீட் பெட்ரோல் மற்றும் ஆக்டேன் 97 என்று அழைக்கப்படும் சூப்பர் கார்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல். இதில் சாதாரண பெட்ரோலில் விலை 110 ரூபாய். ஸ்பீட் பெட்ரோலின் விலை 114 ரூபாய், ஆக்டேன் 97 ரக பெட்ரோலின் விலை 130 என்ற அளவில் உள்ளது. எனவே கிடைக்ககூடிய ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தோராயமாக 115 ரூபாய் என்று வைத்து கொண்டால் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யில் இருந்து கிடைக்கும், 72 லிட்டர் பெட்ரோல் மூலம் மட்டும் 8,280 ரூபாய் கிடைக்கிறது.
பேத்தி பிறந்ததில் மகிழ்ச்சி - ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி..வைரல் வீடியோ!
38 லிட்டர் டீசலின் விற்பனை மூலம் சுமார் 3,800 ரூபாய் கிடைக்கிறது. விமான எரிபொருளின் விலை 110 ரூபாய் என்ற அடிப்படையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய்யில் இருந்து, 1,550 ரூபாய் மதிப்பிலான விமான எரிபொருள் கிடைக்கிறது. இவை போக, தார் மற்றும் நாப்தா 34 லிட்டர் அளவிற்கு கிடைக்கிறது. இவற்றின் சராசரி விலை, 50 ரூபாய் என்று எடுத்து கொண்டால் தார் மற்றும் நாப்தா மூலம் மட்டும் 1,700 ரூபாய் வரை கிடைக்கிறது.
அதாவது, 7,828 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யில் இருந்து, வரிகள், உற்பத்தி செலவு என அனைத்தையும் சேர்த்தால், 15,330 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கிடைக்கிறது. அதாவது, சுமார் 100 சதவிதம் லாபம் கிடைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Petrol Diesel Price