• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு அளவு குடிநீர் பயன்பாடு உள்ளது?

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு அளவு குடிநீர் பயன்பாடு உள்ளது?

Drinking water

Drinking water

உலக அளவில் நிலத்தடி நீரை பெரிதாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் இங்கு நீரின் தரமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக 'நீர் தரக் குறியீடு 2019' ஆண்டில் நடந்த ஆய்வில் தெரிகிறது

  • Share this:
'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவர் கூறிய கூற்றின்படி இந்த உலகத்தில் நீர் ஆதாரம் இல்லையென்றால் இங்குள்ள எல்லா உயிர்களும் மடிந்து போகும். பெருகி வரும் மக்கள் தொகையினாலும், தொழிற்சாலைகளாலும், மாசுபாடுகளாலும் நீர் ஆதாரங்கள் அனைத்துமே அசுத்தமாகி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நீரின் தன்மை இன்னும் மோசமடைந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1.3 பில்லியன் இந்திய மக்களுக்கு வெறும் 4% மட்டுமே ஃபிரஷ் வாட்டர் என்று சொல்லப்படும் சுத்தமான நீர் உள்ளது. அதிலும் கிராம புறங்களுக்கு சரியான அளவில் நீர் பயன்பாடு இன்னும் சென்று அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கருத்தில் கொண்டு, "ஜல் ஜீவன் மிஷன்" என்கிற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் கிராம புறங்கள் மற்றும் நகர் புறங்களுக்கு குழாய் வழியாக குடிநீர் கொண்டு சென்று, மக்கள் பயன்பாட்டிற்கு உதவ வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். நவம்பர் 4, 2021 வரை ஜல் ஜீவன் திட்டத்தை பயன்படுத்தி மொத்தமுள்ள 19.22 கோடியில் சுமார் 8.45 கோடி (44%) கிராம புறங்களுக்கு குழாய் வழியில் குடிநீர் பயன்பாடு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதில் 6 மாநிலங்கள் மற்றும் யூனின் பிரதேசங்களில் உள்ள கிராம புறங்கள் 100% குழாய் இணைப்புகளை முழுமையாக பெற்றுவிட்டது என அரசு அறிவித்துள்ளது. கோவா, தெலங்கானா, ஹரியானா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியவை இவற்றில் அடங்கும். முன்பை காட்டிலும் தற்போது சில காலமாக கிராம மற்றும் நகர் புறங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் படி 2015-2016 ஆண்டை விடவும் 2019-2020 ஆண்டுகளில் 22 மாநிலங்களுக்கு தேவையான குடிநீர் வசதி வழங்கும் திட்டம் பெரிய அளவில் அடைந்துள்ளதாக வெளியிட்டுள்ளது.

Also read:  முப்பதாண்டுகளில் 6 லட்சம் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்த திருச்சி தாமோதரன்

உலக அளவில் நிலத்தடி நீரை பெரிதாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் இங்கு நீரின் தரமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக 'நீர் தரக் குறியீடு 2019' ஆண்டில் நடந்த ஆய்வில் தெரிகிறது. இதில் மொத்தமுள்ள 122 நாடுகளில் இந்தியா 120 ஆம் இடத்தை பிடித்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையினாலும், தொழிற்சாலைகளாலும், மாசுபாடுகளாலும் நீர் ஆதாரங்கள் முழுவதும் அசுத்தமாகி வருகிறது.

இந்த ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களை சுத்தமான முறையில் வைத்துக்கொள்ளும் வழிமுறையும் செய்யப்படுகிறது. இதன்மூலம் பல கிராம புறங்களுக்கு குழாய் வழி குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 12.4% கிராமப்புற மக்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளனர். மேலும் அதிக நீர் தட்டுப்பாடுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் 20.91% கிராமப்புறங்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி உள்ளனர்.

also read:  சமூக மாற்றத்திற்காக அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடிய திருநங்கை!

இந்த வரிசையில் அசாம் (22%), லடாக் (16.62%), ஜார்கண்ட் (15.16%), மேற்கு வங்கம் (13.48%) மற்றும் சட்டிஸ்கர் (13.23%) ஆகிய மாநிலங்களுக்கு குறைந்த அளவிலே இந்த ஜல் ஜீவன் திட்டம் சென்றடைந்துள்ளது. அதே போன்று நகர் புறங்களில் உள்ள சேரிகளில் குடிநீர் பிரச்சனை அதிக அளவில் உள்ளது. இயற்கைக்கான உலகளாவிய நிதியம் வெளியிட்ட அறிக்கைபடி 2050 ஆம் ஆண்டில் 30 இந்திய நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு பெரிய அளவில் இருக்கும் என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் டெல்லியில் வசிக்கும் 44% சேரி வாழ் மக்கள் தனது அன்றாட தேவைகளுக்காக பாட்டில் நீரையே பயன்படுத்துவதாக வெளியிட்டுள்ளனர்.

Also read: Also read:  முன்னாள் துணை மேயரின் மருமகள் குழந்தை கடத்தல் வழக்கில் முக்கியப் புள்ளி

மிஷன் பாணி என்கிற இந்த முன்னெடுப்பை நியூஸ் 18 மற்றும் ஹார்பிக் நிறுவனம் சேர்ந்து தொடங்கியுள்ளது. நீர் மேலாண்மை, பாதுகாப்பான குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவை எல்லா வகையான மக்களுக்கும் சென்று சேர்வதற்காக இந்த முன்னெடுப்பு துவங்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த 'Mission Paani' என்கிற முன்னெடுப்பில் பங்கேற்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: