Home /News /national /

முதல்வர் முதல் பிரதமர் வரை: தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் மோடி

முதல்வர் முதல் பிரதமர் வரை: தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட 49 தீவிரவாதிகளில் 38 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் பிப்ரவரி 19-ம் தேதி தூக்கு தண்டனை விதித்துள்ளது நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்துக்கு எதிராக தீவிரமாக செயல்படுவதைக் காட்டுகிறது.

    குஜராத் மாநிலத்தின் முதல்வராக மோடி இருந்த காலத்திலும் கூட 30 பேர் கொல்லப்பட்ட 2002 அக்ஷர்தம் தீவிரவாத தாக்குத்தலை சிறப்பாக கையாண்டார் என்று பரவலாக புகழப்பட்டார்.

    2008-ம் ஆண்டு நாடு முழுவதும் குறிப்பாக டெல்லி, ஜெய்பூர், பெங்களூரு மற்றும் மாலேகான் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. கிடைத்த தகவலின்படி குஜராத் மாநிலத்தில் இருந்த மோடி அரசு தேசிய அளவில் தீவிரவாத குழுக்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதை உணர்ந்தது.

    உதாரணமாக, மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத் மாநில அரசு அகமதாபாத் தீவிரவாத தாக்குதல் வழக்கில் பிற மாநிலங்களில் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை செய்வதில் தீவிர கவனம் செலுத்தியது. ஆனால், சில மாநில அரசுகள் குஜராத் தாக்குதலில் தொடர்புள்ளவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தீவிரவாதிகளை நீதியின் முன் நிறுத்த முயன்ற குஜராத் அரசுக்கு இடையூறாக இருந்தன.

    கிடைத்த தகவல்களின்படி, உத்தரப் பிரதேச மாநிலம் அசாம்கர் பகுதியிலிருந்த அகமதாபாத் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை கைது செய்து குஜராத்துக்கு அழைத்துவருவதற்கு குஜராத் காவல்துறைக்கு கடும் எதிர்ப்புகள் இருந்தது. அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக மாயாவதி இருந்தார்.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆட்சியில் தீவிரவாதிகளின் மையமாக இருந்த உத்தரப் பிரதேசம்

    2005- 2007-ம் ஆண்டு கால கட்டத்தில் பல தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியாக வாரணாசி இருந்தது. அந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆட்சிக் காலமான 2003 - 2013-ம் ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் தீவிரவாதிகளை மன்னிக்கும் பகுதியாக இருந்தது.

    அரசியலுக்காக அனுசரணையாக செல்லுதல், வாக்கு வங்கி அரசியலின் காரணமாக இந்தியன் முஜாஹீதின், இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஆகியவற்றின் கீழ் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உத்தரப் பிரதேசம் மையாக இருந்தது.

    தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த செய்தியின்படி, 2006-ம் ஆண்டு வாரணாசி பகுதியில் குண்டு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஹரகத் உல் ஜிகாத் இஸ்லாமி மீதான குற்றப் பத்திரிக்கையை திரும்பப் பெற்ற உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. 2006-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி சன்கட்மோசான் மந்திர் மற்றும் வாரணாசி கேன்டி ரயில் நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது 21 பேர் உயிரிழந்ததால் வாரணாசியில் வைக்கப்பட்ட குண்டு கண்டெடுக்கப்பட்டது.

    அப்போதைய உத்தரப் பிரதேச மாநில அரசு வாரணாசி, கோரக்பூர், லக்னோ பகுதிகளில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான புகார்களைத் திரும்பப் பெற்றது.

    தீவிரவாதத்துக்கு எதிராக முதலமைச்சர் மோடி செய்த செயலின் தாக்கம்

    மோடி முதலமைச்சராக இருக்கும்போது இந்தியன் முஜாஹிதின் மற்றும் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தின் சங்கிலியைத் துண்டித்தார். வெறும் குஜராத்தில் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுவதும். அகமதாபாத்தில் குண்டுவெடிப்பில் கிடைத்த தகவல்களைக் கொண்டு குஜராத் அரசு 2008-ம் ஆண்டு இந்தியன் முஜாஹிதின் அமைப்பு நடத்திய குண்டு வெடிப்பு குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முடிந்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, குஜராத் காவல்துறையின் விசாரணை டெல்லியின் பாட்லா இல்லத்தில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவியது. மேலும் இந்தியன் முஜாஹிதினை அழிக்க முடிந்தது.

    உத்தவ் தாக்கரேவை சந்தித்த சந்திரசேகர ராவ்.. பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில் தீவிரம்!!

    தெற்காசியா தீவிரவாத தளத்தில் வெளியான தகவலின்படி ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு ஆகிய பகுதிகளுக்கு வெளியே நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு பெருமளவு குறைந்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான பிரதமர் மோடியின் யுக்தி என்பது சர்வதேச ராஜதந்திரம், பாதுகாப்பு படைகளுக்கு முழுச் சுதந்திரம் அளித்தல், ஜி20 மாநாட்டில் தீவிரவாதம் குறித்த உரையாடலைக் கொண்டுவருவதல் என்பதாக உள்ளது.

    மேலும், அவர் என்.ஐ.ஏ திருத்தச் சட்டம் 2019 மற்றும் தடுப்புக் காவல் திருத்தச் சட்டம் 2019 ஆகியவற்றின் மூலம் விசாரணை அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து வெளிநாடுகளில் தீவிரவாத செயல்களையும் கண்காணிக்க வழிசெய்துள்ளார்.

    ராணுவத்துக்கு பொதுவாக பொதுவெளியில் அரசியல் ரீதியான ஆதரவு கிடைத்தது கிடையாது. ஆனால், அது மோடியின் ஆட்சிக்குப் பிறகு மாறியுள்ளது. மியான்மர், பாகிஸ்தான் எல்லைக் கோட்டைத் தாண்டி நடத்திய தாக்குதல், பாலகோட் வான்வெளித் தாக்குதல் போன்றவற்றுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இடதுசாரி தீவிரவாதம் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. 2009-ம் ஆண்டு 2,258 ஆக இருந்தது 2020-ம் ஆண்டு 665 ஆக குறைந்துள்ளது.

    பிரதமர் மோடிதான் முதன்முறையாக நல்ல தீவிரவாதம் கெட்ட தீவிரவாதம் என்று ஒன்று இல்லை என்று சர்வதேச தளத்தில் பேசினார். ஐக்கிய நாடுகள் சபையில் 2014-ம் ஆண்டு முதன்முறையாக பேசிய பிரதமர் மோடி அனைத்துவிதமான தீவிரவாதத்தையும் அழிக்க வேண்டும் என்று பேசினார்.

    பிரிக்ஸ் நாடுகள் 2021-ம் ஆண்டு மோடி தலைமையில் எதிர் தீவிரவாத தாக்குதல் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Modi

    அடுத்த செய்தி