கொரோனா நோயாளிகளை நண்பர்கள், உறவினர்களுடன் இணைக்கும் ரோபோ அறிமுகம் 

கொரோனா வைரஸ் நோயாளிகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைக்கும் வகையில் இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனை தனது வார்டுகளில் ரோந்து செல்ல வாடிக்கையாளர் சேவை ரோபோவை அனுப்பியுள்ளது.

கொரோனா நோயாளிகளை நண்பர்கள், உறவினர்களுடன் இணைக்கும் ரோபோ அறிமுகம் 
மித்ரா ரோபா
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 9:15 PM IST
  • Share this:
இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கடந்த புதன்கிழமை நிலவரப்படி கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 50 லட்சத்தைக் கடந்தன. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதித்த உலகின் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் நோயாளிகளை நேரிடையாக கையாள இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரோபோ ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ரோபோவின் பெயர் "மித்ரா". இந்தியில் "நண்பர்" என்று பொருள்படும் மித்ரா ரோபோவை கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். பெங்களூரை தலைமையகமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் இன்வென்டோ ரோபாட்டிக்ஸ் இந்த ரோபோவை உருவாக்கியது. சமூக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மித்ரா ரோபோ, பல்வேறு மொழிகள் பேசும் திறன் உடையதாகவும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப திறனும் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

அதன் துளையிட்ட கண்கள் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் (facial recognition technology)  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முன்னர் தொடர்பு கொண்ட நபர்களை நினைவுபடுத்த உதவுகிறது. தற்போதைய கொரோனா தொற்று காலத்தில், கொரோனா நோயாளிகளை மற்றவர்கள் அணுகுவதும் மிகவும் கடினமாக உள்ளது. அத்துடன் மருத்துவ ஊழியர்களுக்கும் வார்டுகளில் இருக்கும் கொரோனா நோயாளிகளை நேரிடையாக அணுக முடியவில்லை. இந்த சூழலை எதிர்கொள்ளும் வகையில் மித்ரா ரோபோ செயல்படுகிறது.

மித்ராவின் மார்பில் இணைக்கப்பட்ட ஒரு டேப்லெட் நோயாளிகளின் அன்பானவர்களை பார்க்க அனுமதிக்கிறது. இதுகுறித்து பேசிய, நொய்டாவிலுள்ள யதார்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர் அருண் லகன்பால், கொரோனா குணமடைய அதிக நாட்கள் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் நோயாளிகளுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் கொரோனா பாதித்தவர்களால் அவரது அன்பானவர்களை பார்க்க முடியாது.


இத்தகைய சுழலில் மித்ராவின் உதவி தேவைப்படுகிறது. குறிப்பாக மித்ரா ரோபோ முக்கியமாக தங்கள் தொலைபேசிகளை பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியாத நோயாளிகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோபோவை பயன்படுத்த மருத்துவமனைக்கு 10 லட்ச ரூபாய் ($ 13,600) செலவாகும் என்று மருத்துவமனையை நடத்தும் நிறுவனத்தின் இயக்குனர் யதார்த் தியாகி தெரிவித்துள்ளார். "பொதுவாக ஒரு உணவியல் நிபுணர் கொரோனா நோயாளியை பார்ப்பது மிகவும் கடினம், அதனால் அவர்களிடம் ரோபோவை சேர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க நிபுணர்களுடன் தொலைதூர ஆலோசனைகளுக்காக மித்ராவும் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரியும், கொரோனா வைரஸ் நோயாளியுமான மஹன்லால் காசி என்பவர் மித்ரா ரோபோவை உறவினர்களுடன் தொடர்புகொள்வதற்கு பயன்படுத்தினார். இதுகுறித்து பேசிய மஹன்லால் காசி, "முக்கியமாக ரோபோ மூலம் நாங்கள் உடல்நிலையை பற்றி விவாதித்தோம். நான் வெள்ளிக்கிழமை இங்கு வந்தேன், இப்போது நான் நன்றாக உணர ஆரம்பித்துவிட்டேன், இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading