ஹோம் /நியூஸ் /இந்தியா /

500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? நெருக்கடியில் ரிசர்வ் வங்கி

500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? நெருக்கடியில் ரிசர்வ் வங்கி

இந்திய ரூபாய்

இந்திய ரூபாய்

2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன.

இந்த நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவானது?, ரூபாயின் மொத்த மதிப்பு, போக்குவரத்து செலவு ஆகிய தகவல்களை வெளியிட ஆர்.டி.ஐ மூலம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், ரிசர்வ் வங்கி வழங்கிய பதில் திருப்தியளிக்காத நிலையில் மத்திய தலைமை தகவல் ஆணையத்தை மனுதாரர்நாடினார்.

ரிசர்வ் வங்கி

இதனை அடுத்து, இது தொடர்பாக பதிலளிக்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டது. எனினும், 500, 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான விவரங்களை வெளியிடுவது என்பது தேசத்தின் இறையாண்மை, நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு விரோதமானது என பதில் அளிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தகவல் ஆணையம், “500, 2000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு அச்சடிக்கப்பட்டது என்ற விவரங்களை வெளியிடுவதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது, பாதிப்பும் ஏற்படாது. ஆர்.டி.ஐ. சட்டத்தில் விலக்க வரம்புக்குள்ளும் இந்த விஷயங்கள் வராது. ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு விபரம், போக்குவரத்து செலவு, மூலப்பொருட்கள் செலவு உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவது பாதகமான விளைவை ஏற்படுத்தும் என கூற முடியாது. எனவே, மனுதாரர் கேட்ட விவரங்களை வெளியிட வேண்டும்,” என்று ரிசர்வ் வங்கிக்கு தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவால் ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி எழுந்துள்ளது.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Demonetisation, RBI, RTI