சசிகலா எத்தனை நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்? - மருத்துவ கண்காணிப்பாளர் விளக்கம்

சசிகலா எத்தனை நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்? - மருத்துவ கண்காணிப்பாளர் விளக்கம்

சசிகலா

சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை.

 • Share this:
  இன்னும் 10-ல் இருந்து 15 நாட்கள் மருத்துவமனையில், சசிகலா சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

  இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ரமேஷ் கிருஷ்ணா, சசிகலாவிற்கு தற்போது காய்ச்சல் இல்லை என்று தெரிவித்தார்.

  மேலும், நுரையீரல் பாதிப்பால் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு மூச்சு திணறல் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இன்னும் 10-ல் இருந்து 15 நாட்கள் வரையில், விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்றார்.

  மேலும் படிக்க... சசிகலாவிற்கு கடுமையான நுரையீரல் தொற்று: மருத்துவ அறிக்கை வெளியீடு

  சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட ரமேஷ் கிருஷ்ணா,, அனைத்து வசதிகளும் விக்டோரியா மருத்துவமனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

  சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குற்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: