சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு; எந்த பகுதியில் எவ்வளவு பேர்? - அப்டேட்..!

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 66.67% பேரும், பெண்கள் 33.33% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்

சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு; எந்த பகுதியில் எவ்வளவு பேர்? - அப்டேட்..!
சென்னையில் குணமானவர்கள்
  • Share this:
சென்னையில் இதுவரை மொத்தம் 235 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 53 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 73 பேரும், திருவிக நகரில் 34 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 26 பேரும், கோடம்பாக்கத்தில் 26 பேரும்,  அண்ணாநகரில் 24 பேரும்,   தேனாம்பேட்டையில் 19 பேரும் உள்ளனர். மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் குணமடைந்து வரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. ராயபுரத்தில் 12 பேரும், அண்ணாநகரில் 10 பேரும், கோடம்பாக்கத்தில் 9, தேனாம்பேட்டையில் 6, வளசரவாக்கத்தில் 3 பேரும், மாதவரம், அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் தலா 2 பேரும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தலா 1 நபரும் குணமடைந்து உள்ளனர்.


சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.
மண்டலம் - மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்___திருவொற்றியூர் - 5 - 0 - 0மணலி - 0 - 0 - 0மாதவரம் - 3 - 0 - 2தண்டையார்பேட்டை - 26 - 1 - 0ராயபுரம் - 73 - 5 - 12 திருவிக நகர் - 34 - 1 - 5 அம்பத்தூர் - 0 - 0 - 0 அண்ணாநகர் - 24 - 0 - 10 தேனாம்பேட்டை - 19 - 0 - 6 கோடம்பாக்கம் - 26 - 0 - 9 வளசரவாக்கம் - 5 - 0 - 3 ஆலந்தூர் - 3 - 0 - 1 அடையார் - 7 - 0 - 2 பெருங்குடி - 7 - 0 - 2 சோழிங்கநல்லூர் - 2 - 0 - 1

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 66.67% பேரும், பெண்கள் 33.33% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 53 பேருக்கு தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 2 நபரும், 80 வயதுக்கு மேல் 3 நபரும் பாதித்து உள்ளனர்.10 முதல் 19 வயதுள்ளோர் 17 பேருக்கும், 20 முதல் 29 வயதுள்ளோர் 34 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 43 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 42 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 25 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 15 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.வயது = பாதித்தோர் எண்ணிக்கை____0-9 = 210-19 = 1720-29 = 3430-39 = 5340-49 = 4350-59 = 4260-69 = 2570-79 = 1580 = 3








First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading