சிவசேனா செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணிக்கு எதிராகவும், முதலமைச்சரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்ரேவுக்கு எதிராகவும் அக்கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 35க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் அசாம் தலைநகர் கவுஹாத்தியில் உள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளனர்.
இவர்களை எச்சரிக்கும் விதமாகத் தான் சஞ்சய் ராவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அம்மாநில துணை சபாநாயகர் நர்ஹாரி சிர்வால் புகைப்படத்தை வைத்து, இன்னும் எவ்வளவு நாள் தான் கவுஹாத்தியில் ஒளிந்து கொண்டு இருப்பீர்கள். இங்கு திரும்பி வந்து தானே ஆக வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அவருடன் இருக்கும் 16 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹாரி சிர்வால் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அம்மாநில சட்டப்பேரவையில் 2021ஆம் பிப்ரவரி மாதம் முதல் சபாநாயகர் பொறுப்பு காலியாக உள்ளது.
कब तक छीपोगे गोहातीमे..
आना हि पडेगा.. चौपाटीमे.. pic.twitter.com/tu4HcBySSO
— Sanjay Raut (@rautsanjay61) June 26, 2022
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிர்வால் தான் தற்போது துணை சபாநாயகராக உள்ளார். தங்களிடம் தான் கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு துணை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மீதும், என் மீதும் விசாரணை நடந்த போது நாங்கள் தர்ணாவோ, ட்ராமாவோ செய்யவில்லை - அமித் ஷா பேட்டி
இதை துணை சபாநாயகர் ஏற்காத நிலையில், இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இரு தரப்பும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்ப்பை காத்திருக்கும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் எப்போது மகாராஷ்டிரா திரும்புவார்கள் என்பது தெரிவில்லை. இதைத் தான் சஞ்சய் ராவத் எப்படியும் நீங்கள் மும்பைக்கு திரும்பித்தானே ஆக வேண்டும் எவ்வளவு நாள் தான் கவுஹாத்தியிலேயே இருக்க முடியும் எனக் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shiv Sena, Uddhav Thackeray