மாநிலங்களவையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக 238 பேர் நியமிக்கப்படுகின்றனர். மீதமுள்ள 12 எம்.பி.க்கள் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படுவர்.
மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள், பிற மாநில அவை உறுப்பினர்களை போல் அல்லாமல் நேரடியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
சமூகத்திற்கு சிறப்பாகத் தொண்டாற்றிச் சாதனைகள் புரிந்த இந்திய குடிமகனாக உள்ளவரை நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்படுபவர்கள், இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை ஆகிய 4 துறைகளில் ஏதேனும் ஒன்றில் சிறப்பு அறிவு அல்லது செயல்முறை அறிவு பெற்று இருக்க வேண்டும்.
இதில் சமூக சேவைக்குள் கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், பொருளாதார அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்
மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாக தற்போது இருக்கிறது.
அனைத்து அவை நடவடிக்கைகளிலும் பிற உறுப்பினர்களைப் போல், நியமன உறுப்பினர்களும் மாநிலங்களவையில் பங்கேற்கலாம்.
நியமன உறுப்பினரான பின் 6 மாதத்திற்குள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால், 6 மாதத்திற்கு பிறகு கட்சியில் இணைந்தால் கட்சி தாவல் தடை சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது, ஆனால் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ilayaraja, Rajya Sabha