ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவானது எப்படி?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவானது எப்படி?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் ஒரு இயக்கம் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Delhi

  மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு எப்படி உருவானது என்பது பற்றி இந்த சிறப்புத் தொகுப்பில் காணலாம்.

  கடந்த 2007-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் 3 இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா. கேரளாவில் தேசிய ஜனநாயக முன்னணி, கண்ணியத்திற்கான கர்நாடகா மன்றம் மற்றும் தமிழ்நாட்டில் மனித நீதி பாசறை ஆகிய அமைப்புகளை இணைத்தது தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா.

  2006-ஆம் ஆண்டு கோழிக்கோட்டில், நடைபெற்ற மாநாட்டில் 3 அமைப்புகளையும் ஒன்றிணைத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் பெங்களூருவில் நடைபெற்ற இந்தியாவை அதிகாரமாக்கு என்ற மாநாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சிமி அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, மத சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நலனுக்கு சேவை புரிவதாக அறிவித்தது.

  Also Read: PFI இயக்கத்தை தடை செய்து மத்திய அரசு உத்தரவு

  காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் ஒரு இயக்கம் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா. எனினும் இந்த கட்சிகள் வாக்கு வங்கிக்காக அவர்களுடன் கைகோர்த்துள்ளதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

  PFI அமைப்பு தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரிக் குழுக்கள் செய்து வரும் பணியைப் போன்று முஸ்லிம்களிடையே சமூக மற்றும் இஸ்லாமிய சமயப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

  PFI அதன் உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பவர்களின் பதிவுகளையும் பராமரிப்பதில்லை. எனவே, குற்றங்களில் ஈடுபட்டு, அவர்கள் கைதாகும் போது அந்த அமைப்பின் மீது குற்றம்சாட்டுவது சவாலானதாக உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  2009-ம் ஆண்டில், SDPI எனப்படும் சமூக ஜனநாயகக் கட்சி என்ற அரசியல் அமைப்பு PFI யில் இருந்து உருவானது, முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் பிரச்சினைகளை களையும் நோக்கத்துடன் SDPI செயல்படுவதாக கூறப்படுகிறது.

  முஸ்லிம்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஆதிவாசிகள் உட்பட அனைத்து குடிமக்களின் முன்னேற்றம், மேம்பாடு மற்றும் அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவதாகவும் அக்கட்சி கூறிவருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: NIA, Tamil News