ஃபேஸ்புக் வழியாக அதிகரிக்கும் மோசடிகள்: இப்படி பதிவுகள் வந்தால் கவனமாக இருங்கள்

ஃபேஸ்புக்கில் போலி கணக்குகள் தொடங்கி பண மோசடிகள் நடைபெறுவது சமீபத்தில் அதிகரித்துவருகிறது.

ஃபேஸ்புக் வழியாக அதிகரிக்கும் மோசடிகள்: இப்படி பதிவுகள் வந்தால் கவனமாக இருங்கள்
கோப்புப்படம்
  • Share this:
பொதுவாக சாதரண நபர்களையும், அப்பாவி மக்களையும் குறி வைத்துதான் ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், தற்போது சமூகத்தில் மிகப் பிரபலங்களையும் குறிவைத்து ஆன்லைன் மோசடிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. எம்.எல்.ஏ, எஸ்.பி, டி.எஸ்.பிக்கள் வரை இந்த ஆன்லைன் மோசடிக்கு இறையாகியுள்ளன. சமீபத்தில் குஜராத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. குஜராத்தின் ஜமால்புர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் யுசுஃப்பாய் கேதவலா. அவர், ஃபேஸ்புக்கில் மூலம் நடைபெற்ற மோசடி குறித்து சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். கேதவலாவின் நண்பர், கேதவாலாவின் பெயரில் இருந்த ஃபேஸ்புக் போஸ்டை பார்த்துள்ளார்.

அந்தப் போஸ்ட்டில், ‘நான் தற்போது காந்தி நகரில் இருக்கிறேன். எனக்கு அவசரமாக 30,000 ரூபாய் தேவைப்படுகிறது. நீங்கள் கூகுள் பே அல்லது பேடிஎம் மூலம் பணத்தை அனுப்பலாம்’ என்று குறிப்பிட்டிருந்தது. அந்தப் போஸ்டைப் பார்த்த கேதவாலாவின் நண்பர்கள், அவருக்கு பணம் தேவையென்றால் நமக்கு நேரடியாக போன் மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே? அல்லது போனுக்கு மெசேஞ் அனுப்பியிருக்கலாமே? எதற்காக ஃபேஸ்புக் போஸ்ட் மூலம் பணத்தை கேட்டுள்ளார் என்று கருதியுள்ளனர்.

இதுகுறித்து உறுதிபடுத்துவதற்காக கேதவாலாவை அவரது நண்பர்கள் தொடர்பு கொண்டபோது, ‘நான் அப்படி எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை என்று பதிலளித்துள்ளார். உண்மையில், நடந்தது என்னவென்றால் கேதவாலா பதிவிட்ட புகைப்படங்களை பயன்படுத்தி போலியாக ஒரு ஃபேஸ்புக் கணக்குத் தொடங்கப்பட்டு இத்தகைய பதிவிடப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த விவரம் தெரிந்த உடன், இதுதொடர்பாக சைபர்பிரிவு காவல்துறையில் கேதவாலா புகார் அளித்துள்ளார்.


அதேபோல புவனேஸ்வரிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தமுறை புவனேஸ்வர் காவல்துறை ஆணையாளர் சுதன்சு சாரங்கியை குறிவைத்துள்ளனர். சாரங்கியின் பெயரில் அவருடைய நிஜ ஃபேஸ்புக் கணக்கைப் போலவே புதிதாக போலி கணக்கை உருவாக்கியுள்ளனர். அதில், பணம் தேவை என்று பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த சாரங்கி, அவருடைய நண்பர்களிடம் இதுபோன்ற பதிவுகளில் யாரும் பணம் அனுப்பவேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல, ஒடிசா மாநில டிஜிபி அனுப் குமாரின் பெயரிலும் போலி கணக்கு உருவாக்கப்பட்டு பணம் கேட்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் ஆன்லைன் மோசடியில் மும்பையைச் சேர்ந்த பெண் 11 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.

சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. எப்படி இத்தகைய மோசடிகள் நடைபெறுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலம் அவரசமாக பணம் தேவைப்படுகிறது? சில நாள்களில் திரும்ப அனுப்புவிடுவேன் என்று உங்களுக்கு மெசேஞ் அனுப்பும்போது, அதுமிகப் பெரிய அளவிலான பணமாக இல்லாதபோது, நீங்கள் உடனடியாக பணத்தை அனுப்பிவிடுவீர்கள். பின்னர், நீங்கள் உங்கள் நண்பரைத் தொடர்புகொண்டு பணத்தை திரும்ப கேட்கும்போது நீங்கள் ஏமாந்தது தெரியவரும்.கடந்த ஆறு மாதங்களில் ஆன்லைன் மோசடிகள் மிக அதிக அளவு அதிகரித்துள்ளது. முதல் இந்த ஆன்லைன் மோசடியாளர்கள் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை ஹேக்செய்வார்கள். பின்னர், உங்களுடைய நண்பர்களைக் கண்டறிந்து பணம் கேட்பார்கள். அதிகரித்துவரும் ஆன்லைன் மோசடிகள் இத்தகைய சம்பவங்களின்போது நாம் கவனமாக இருக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. ஆன்லைன் மோசடியாளர்கள் புதிய புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். தற்போது, ஃபேஸ்புக் கணக்கை ஹேக் செய்வதற்கு பதிலாக பிரபலமானவர்களின் பெயரில் போலிக் கணக்குகளைத் தொடங்கி மோசடி செய்கின்றனர். ஆன்லைன் மோசடியாளர்கள் ஃபேஸ்புக் மூலம் மட்டும் மோசடி செய்யவில்லை. அவர்கள், வாட்ஸ்அப் மற்றும் ஓஎல்எக்ஸ் மூலம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.


ஆன்லைன் மோசடியில் ஏமாந்தால் என்ன செய்யவேண்டும்?

ஆன்லைன் மோசடி மூலம் ஏமாந்தவர்கள், மத்திய அரசின் (www.cybercrime.gov.in ) என்ற இணையதள பக்கத்தில் புகார் அளிக்கலாம். இந்த இணையதளத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் புகார்கள் மற்றும் ஆன்லைன் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம். இந்த இணையதளத்தில் உங்களுடைய பெயர் மற்றும் மொபைல் எண்களைப் பதிவு செய்து அதன்பின்னர் புகார் அளிக்கலாம். இதில் புகார் அளிக்கும் சில ஆவணங்களையும் பதிவு செய்யவேண்டும்.
வங்கி ஸ்டேட்மெண்ட், பணம் ட்ரான்ஸ்பர் செய்த ரசீது, க்ரெடிட், டெபிட் கார்டு ரசிதுகள் உள்ளிட்ட ஆவணங்களைப் அளிக்கவேண்டும். நீங்கள் புகாரைப் பதிவு செய்தபிறகு, அந்த வழக்கு அந்தக் குற்றம் நடைபெற்ற மாநிலத்துக்கு மாற்றப்படும். விசாரணை நடைபெறும் விவரம் இணையதளத்துக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். இந்த இணையத்தில் அளிக்கப்படும் புகார்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார்களைத் திரும்ப பெற முடியாது. ஆனால், ஆன்லைன் பண மோசடி தொடர்பான புகார்களைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். உங்கள் புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதற்கு முன்னர்தான் புகாரைத் திரும்ப பெற முடியும்.

ஃபேஸ்புக் மூலம் நடைபெறும் மோசடிகள் தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் வழங்கும் அறிவுரைகள்:

ஃபேஸ்புக் மூலம் நடைபெறும் மோசடிகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் நேரடியாக நடவடிக்கை எடுக்காது. அந்த குறிப்பிடத் தகுந்த ஃபேஸ்புக் பதிவை நீக்கமட்டும் செய்யும். ஆனால், ஃபேஸ்புக் அதனுடைய உதவி பக்கத்தில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஆன்லைனில் நடைபெறும் மோசடிகளை ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்தியுள்ளது.

1.காதல் மோசடி
2.லாட்டரி மோசடி
3.லோன் மோசடி
4.வேலை குறித்த மோசடி
5.டோக்கன் மோசடி

பெரும்பாலும், காதல், லாட்டரி, வேலை என்ற முறையில் ஏராளமான மோசடிகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading