Union Budget 2021 | பட்ஜெட் 2021 - மூத்த குடிமக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

மூத்த குடிமக்கள்

பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு, முதலீடு உள்ளிட்ட திட்டங்களில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

  • Share this:
வீட்டை நிர்வகிக்கும் மூத்த குடிமக்கள் தங்களின் ஊதியத்தை குழந்தைகளின் கல்வி, மருத்துவம், திருமணம் மற்றும் வீடு ஆகியவற்றுக்காக செலவழிக்கின்றனர். மிகவும் அரிதாகவே தங்கள் இறுதி வாழ்வுக்கான சேமிப்பு பற்றி யோசிக்கின்றனர். தற்போதைய காலத்தில் மூத்த குடிமக்களை பிள்ளைகள் சுமையாக எண்ணும் நிலமை வளர்ந்து வருவதால், அவர்கள் தங்களின் இறுதிகால மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சேமிப்பை தேர்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றனர். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் மூத்த குடிமக்களுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்கிவருவதால், அந்த திட்டங்களில் அந்த நாட்டு மக்கள் பெருமளவு முதலீடு செய்கின்றனர். இது அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் நாடு முழுமைக்குமான கவர்ச்சிகரமான பென்சன் திட்டம் இல்லை. உலகளாவிய சிறந்த 37 பென்சன் திட்டங்களில் நம் நாட்டில் இருக்கும் பென்சன் திட்டம் 32 வது இடத்தில் உள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், மூத்தகுடிமக்களுக்கான சிறந்த பென்சன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை இருப்பதை உணர்த்துகிறது. அதனால், பிப்ரவரி 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யும் திட்டங்களிலும் மூத்தகுடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மூத்த குடிமக்களுக்காக கவனம் செலுத்த வேண்டிய 4 திட்டங்கள்;

ஒருங்கிணைந்த சேமிப்பு மற்றும் இன்சூரன்ஸ் : 

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ செலவு மற்றும் மருத்துவம் அல்லாத தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ஒருங்கிணைந்த காப்பீடின் கீழ் சேமிப்பு திட்டங்களை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சேமிப்பு திட்டங்களை வழங்கவும், தொகுக்கப்பட்ட காப்பீடு திட்டங்களில் சர்வதேச நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அரசு பங்களிப்புடன் கூடிய நிதி ஆதாரத்தை மட்டுமே ஓய்வூதிய தாரர்கள் நம்பியுள்ளதால், வருவாய் ஈட்டும் முதலீட்டு திட்டங்களை உருவாக்குவதை புதிய பட்ஜெட்டில் உறுதி செய்ய வேண்டும். PMVVY, POMIS ஆகிய திட்டங்களின் சேமிப்புகளுக்கு வரிவிலக்கை உறுதி செய்ய வேண்டும்.

காப்பீட்டில் கூடுதல் சேவைகளை சேர்த்தல் : 

சுகாதார காப்பீட்டில் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துகொள்ள வழிவகை மற்றும் சேவைகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் கிடைக்கும். மூத்த குடிமக்களை பராமரிப்பதற்கான சேவை நிறுவனங்களின் தேவை அதிகரிப்பு, வல்லுநர்கள் மற்றும் உதவியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது இதற்கு சான்றாக இருப்பதால், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக கோவிட் வைரஸ் காலத்தில் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சேவை பெருமளவு தேவையாக இருந்தது. இதனால், இத்தகைய சேவைகளை காப்பீட்டில் கூடுதல் அம்சமாக சேர்த்தால், மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கை : 

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூக்குப்பிறகான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மூத்த குடிமக்களுக்கான தேசிய வரைவுக்கொள்கை 2020, இரண்டாவது தொழில் விருப்பங்களை அங்கீகரித்துள்ளது. அதன்படி, 60 முதல் 70 வயத்துக்குட்பட்ட மூத்த குடிமக்கள் பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களில் ஆலோசர்களாக பணிபுரிய வழிவகை செய்கிறது. இதனை 75 வயதாக உயர்த்துவது மற்றும் வேலை வாய்ப்பை தேர்வுசெய்ய மூத்த குடிமக்களை ஊக்குவிக்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறார்கள் என கூறியுள்ளது. ஓய்வுகாலத்தில் அவர்கள் பெறும் நிலையான வருமானம் அவர்களை தன்மானத்துடன் வாழ வழி செய்கிறது என்பதால் அதுபோன்ற திட்டங்களில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என பலர் விரும்புகிறார்கள்

வரிச்சலுகை : 

மூத்த குடிமக்களை பராமரிக்கும் குடும்பங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும் என பலர் எதிர்பார்க்கின்றனர். முதியோர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரிச்சலுகை வழங்குவது தொடர்பான தெளிவான விளக்கம் தற்போது நடைமுறையில் இல்லை. மருத்துவ நடைமுறைகளுக்கு மட்டும் ஜி.எஸ்.டி விலக்கு இருப்பதால், மூத்த குடிமக்களுக்கான அனைத்து சேவைகளுக்கும் அதனை விரிவுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வரிச்சலுகை விரைவாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிபுணர்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில் நிலையான வட்டி கிடைப்பதையும் உறுதிபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். வரி இல்லாத சேமிப்பு திட்டங்களை மூத்த குடிமக்களுக்கு பிரத்யேகமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் எனவும் பலரும் விரும்புகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: