• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • கொடூரமான கொலை வழக்கில் திருப்பு முனை ஏற்படுத்திய ‘ஸ்லிப்பர்’

கொடூரமான கொலை வழக்கில் திருப்பு முனை ஏற்படுத்திய ‘ஸ்லிப்பர்’

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் ஒரு கொலை வழக்கில் துப்புக் கிடைக்காமல் தவித்த கிரைம் பிராஞ்ச் போலீசாருக்குத் திருப்பு முனையாக கிடைத்தது பாதிக்கப்பட்டவரின் காலணிகள்.

 • Share this:
  மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் ஒரு கொலை வழக்கில் துப்புக் கிடைக்காமல் தவித்த கிரைம் பிராஞ்ச் போலீசாருக்குத் திருப்பு முனையாக கிடைத்தது பாதிக்கப்பட்டவரின் காலணிகள்.

  அக்டோபர் மாதம் 27 வயது வாலிபர் ஒருவர் காணாமல் போகிறார். இவருக்கு கள்ளத்தொடர்பு இருந்த பெண்ணின் கணவர் இவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்திருந்தது. இது தொடர்பாக முக்கிய குற்றம்சாட்டப்பட்டவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வீட்டின் முன் பக்கத்தில் கிடந்த செருப்பு ஒன்று மூலம் துப்பு துலங்கியது.

  கொலையுண்ட 27 வயது நபரின் காலணி வீட்டின் முன் கிடந்துள்ளது. இதன் மூலம் கொலைக்குற்றவாளி யார் என்பதை போலீஸார் துல்லியமாகத் துப்புத் துலக்கிக் கண்டு பிடித்தனர். 27 வயது நபர் பவ்தான் பகுதியைச் சேர்ந்தவர், இவரைக் காணவில்லை என்று இவரது தாயார் அக்டோபர் 22ம் தேதியன்று புகார் கொடுத்தார். இதனையடுத்து கொலை, ஆட்கடத்தல் கும்பலின் கைவரிசை என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.

  ஒன்றுமே புலப்படாத நிலையில் காணாமல் போனார் என்று கூறப்பட்ட நபரின் செருப்பு ஒரு வீட்டின் வாசலில் இருந்தது தெரியவந்தது. அதாவது இந்த நபருக்கும் இன்னொரு நபரின் மனைவிக்கும் இடையே கள்ள உறவு இருந்திருக்கிறது. அந்த வீட்டின் முன் தான் கொலையுண்ட நபரின் செருப்பு இருந்துள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நபர் தன் மனைவியின் செல்போனில் இரண்டு மிஸ்டு கால்களை பார்த்திருக்கிறார். இது அக்டோபர் 21ம் தேதி நடந்தது. போன் வந்த எண் கொலையுண்ட நபரின் மொபைல் எண் அது.

  இந்நிலையில் சம்பவத்துக்கு முதல் நாள் தன் கள்ளக்காதலியை சந்திக்க வந்துள்ளார் அவர். அப்போது அங்கு காத்திருந்த கணவனும் அவனது இரண்டு கூட்டாளிகளும் இந்த நபரை வயிற்றிலும் கழுத்திலும் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தனர். பிறகு உடலை கள்ளச்சாராயம் காய்ச்சும் தங்கள் இடத்துக்கு எடுத்துச் சென்று அங்கு பிணத்தை எரித்தனர்.

  பிறகு எலும்புகளை பல்வேறு இடங்களில் குற்றவாளிகள் போட்டு விட்டுச் சென்றனர். விசாரணை மேற்கொண்ட போலீஸார் முதலில் கூட்டாளியை கைது செய்தனர். இவரிடம் ‘முறைப்படி’ நடத்திய விசாரணையில் தப்பியோடிய 2 பேர் பற்றிய தகவல் கிடைக்க அவர்களை போலீசார் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வைத்துக் வைத்துக் கைது செய்தனர்.

  இந்த ஸ்லிப்பர்கள் மட்டும் மறைக்கப்பட்டிருந்தால் இந்த வழக்கில் துப்பும் துலங்கியிருக்காது, இது ஒரு கொலை என்பதைக் கண்டுப்பிடிக்கவே நீண்ட காலமாகியிருக்கும். குற்றமிழைப்பவர்கள் அவர்களையும் அறியாமல் சாட்சியாக எதையாவது விட்டுச் செல்வார்கள் என்ற கிரிமினாலஜியின் அடிப்படை அல்லது அரிச்சுவடி பாடம் இந்த வழக்கிலும் கைகொடுத்துள்ளது. உடலை எரித்து எலும்புகளை ஆங்காங்கே போடும் அளவுக்கு கிரிமினல் புத்தி கொண்ட கொலையாளிகள், கொலைசெய்ய்ப்பட்டவரின்  செருப்புகளினால் சிக்கிக் கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: