இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு எப்படி இருக்கும்?

மாதிரிப்படம்

முதல் அலையின்போது இந்தியாவில் 30 சதவீதம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர்.  இரண்டாவது அலையிலும் 30 சதவீதம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். எனவே, தற்போது பெரும்பாலானோர் ஏற்கனவே தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

 • Share this:
  கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் இந்தியாவை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்ற எண்ணமும் மக்களின் மனங்களில் எழுந்துள்ளன.

  கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக தடுப்பூசி செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தி வருகின்றன. மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவதால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா 2வது அலையின்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  தினசரி பாதிப்புகள் அதிகபட்சமாக 4 லட்சம் வரை சென்றது, இறப்புகளும் அதிகமாக பதிவாகியது.  மருத்துவ வசதி, ஆக்சிஜன் வசதி போன்றவை கிடைக்காமல் மக்கள் இன்னல் அடைந்தனர். இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ்  உள்ள அமைப்பால் அமைக்கப்பட்ட  நிபுணர் குழு ஒன்று, மூன்றாவது அலை செப்டம்பர் மற்றும் அக்டோபர் இடையே எந்த நேரத்திலும் நாட்டைத் தாக்கும் என்று கணித்துள்ளது.

  இதையும் படிங்க: கொரோனா மூன்றாம் அலை அக்டோபரில் உச்சம் தொடும்... பிரதமர் அலுவலகத்தில் நிபுணர்கள் அறிக்கை


  சில நிபுணர்களின் கணிப்புப்படி 2வது அலையில் பதிவானதை போன்று  3வது அலையில் அதிக அளவில் கொரோனா தொற்றுகள் பதிவாகாது என்று தெரியவந்துள்ளது. ஹைதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) மாதுகுமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திரா அகர்வால் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும்போது இந்தியா கோவிட் -19 வழக்குகளில் மற்றொரு உயர்வைக் காணும் என்று கணித்துள்ளது. அதன்படி தினசரி பாதிப்பின் உச்சத்தின்போது ஒரு  லட்சத்துக்கு குறைவாக தொற்றுகளே பதிவாகும் என்றும் மிகவும் மோசமான நிலையில், அதிகபட்சமாக தினசர பாதிப்பு ஒன்றரை லட்சமாக பதிவாகக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா 3வது அலை


  மூன்றாவது அலையில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல் குறைவாக அளவிலே இந்தியர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நியூஸ் மினிட் ஊடகத்திற்கு பேட்டியளித்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.  எனெனினும் முதல் அலையின்போது இந்தியாவில் 30 சதவீதம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர்.  இரண்டாவது அலையிலும் 30 சதவீதம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். எனவே, தற்போது பெரும்பாலானோர் ஏற்கனவே தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தற்போது தடுப்பூசியும் உள்ளது என்று சோனேபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியர் கவுதம் மேனன் கூறியுள்ளார்.

  படிக்க: ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு


  பெரும்பாலானோர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றும் தொற்று ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பு குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்துவதை பரவலாக்குவதன் மூலம் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  சென்னையில் 80 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. எனவே, புதிய வகை கொரோனா வைரஸ் பரவினாலும் நொய் எதிர்ப்பு சக்தி உள்ள நபரிடம் இருந்து அதனால் பிறருக்கு எளிதாக பரவ முடியாது என்று தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முளியில் நியூஸ் மினிட் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.  எனவே, தடுப்பூசி செலுத்துவதை  விரைவுபடுத்துவதன் மூலம் மூன்றாவது அலையின் பாதைப்பை பெருமளவு குறைக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

  மேலும் படிக்க: சமூக வலைதளங்களில் மிந்த்ராவுக்கு எதிராக திடீர் முழக்கம்: காரணம் என்ன?

  Published by:Murugesh M
  First published: