முதலாளியின் ஏடிஎம் கார்டை திருடி கொஞ்சம் கொஞ்சமாக 2.7 லட்சத்தை சுருட்டிய சமையல்காரர் கைது..

முதலாளியின் ஏடிஎம் கார்டை திருடி கொஞ்சம் கொஞ்சமாக 2.7 லட்சத்தை சுருட்டிய சமையல்காரர் கைது..

மாதிரிப்படம்.

முதலாளியின் ஏடிஎம் கார்டை திருடி அவரது வங்கிக் கணக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வருடத்தில் ரூபாய் 2.7 லட்சத்தை எடுத்த சமையல் காரர் ஒருவரை ரச்சகொண்டா பகுதியின் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  முதலாளியின் ஏடிஎம் கார்டை திருடி அவரது வங்கிக் கணக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வருடத்தில் ரூபாய் 2.7 லட்சத்தை எடுத்த சமையல் காரர் ஒருவரை ரச்சகொண்டா பகுதியின் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள வனஸ்தாலிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசபுரம் காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, புகார் அளித்தவரின் சகோதரி அமெரிக்காவில் இருந்து பணத்தை அனுப்புவதை அவருடைய சமையல்காரர் கவனித்து வந்துள்ளார். புகார் அளித்தவரின் டெபிட் கார்டு வீட்டில் இருந்த மேசையில் இருப்பதையும் அதன் அட்டையில் எழுதப்பட்டுள்ள பின் நம்பரையும் கவனித்து வைத்துள்ளார். பின்னர், அவர் வீட்டில் இருந்து டெபிட் கார்டை எடுத்துச் சென்று பணத்தை எடுத்துள்ளார்.

  காவல்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக பேசும்போது, ``சமையல்காரர் வீட்டில் இருந்து பலமுறை டெபிட் கார்டை எடுத்துச் சென்றுள்ளார். வனஸ்தாலிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். பின்னர், அந்த கார்டை அதே இடத்தில் சென்று வைத்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சமையல்காரரை சந்தேகிக்க தொடங்கியதும் அந்த நபர் வீட்டில் வேலை செய்வதை நிறுத்திவிட்டு பெங்களூருக்குச் சென்றுள்ளார். திருடிய பணத்தை அதிகளவில் செலவு செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க: பிரசவ வலியால் துடித்தபோதும் பேய் ஓட்டும் சடங்குகள் செய்த கொடூர குடும்பம். கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு.. கணவர் உட்பட 4 பேர் கைது..

  கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சமையல்காரர் சுமார் 2.7 லட்சத்தை எடுத்துள்ளார். எனினும், அவர்மீது புகார் அளித்தவருக்கு ஆரம்பத்தில் எவ்வித சந்தேகமும் எழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தவரின் சகோதரி இந்தியாவிற்கு வந்து பணப்பரிவர்த்தனைகளை சரிபார்க்கும்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரை அடுத்து சமையல்காரர் லக்‌ஷ்மி நாராயணனை பெங்களூரில் வைத்து காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
  Published by:Ram Sankar
  First published: