• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளாவில் கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளத்தில் சரிந்துவிழும் முழு வீடு- பதறவைக்கும் வீடியோ

கேரளாவில் கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளத்தில் சரிந்துவிழும் முழு வீடு- பதறவைக்கும் வீடியோ

கேரளா வெள்ளத்தில் சரிந்துவிழும் வீடு

கேரளா வெள்ளத்தில் சரிந்துவிழும் வீடு

கேரளாவில் கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில் முழு வீடும் அடித்துச் செல்லப்படுகிறது.

  • Share this:
    தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால், கேரளாவில் கடலோர மாவட்டங்கள் உட்பட மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது.

    தொடர்ந்து, வருகின்ற 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோட்டயம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உட்பட 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் மற்றும் மலைப்பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

    இதனிடையே கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் சிலரை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 பேர் பலியாகி இருப்பதாக மாநில அரசு தகவல்கள் கூறுகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்காக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்காக முப்படைகளும் களமிறங்கியுள்ளன.


    மேலும் மழை காரணமாக பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக 4 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என மாநில வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் அறிவித்துள்ளார்.
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் கோட்டயம் மாவட்டம் கால்லேபள்ளம் பகுதியில் கரைபுரண்டு ஓடும் ஆற்றில் முழு வீடு மூழ்கியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. நல்லவேளையாக அந்த வீட்டில் இருந்த அனைவரும் வீடு சரிவதற்கு முன்னதாக மீட்கப்பட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: