கேரளாவில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்க முயற்சி செய்த நைட்டி திருடனை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் தலையோலப்பறம்பை அடுத்த கீழுரில் வசித்து வரும் வயதான தம்பதியர் வீட்டை கொள்ளையடிக்க முயற்சி செய்த நைட்டி திருடனை போலீசார் கைது செய்தனர். வேறு காவல் சரகத்தில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த சஎஸ்.ஐ தலைமையிலான காவல் குழுவினருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
கீழுரில் உள்ள தனது வீட்டில் எம்.எம்.மேத்யூ என்ற 80 வயது முதியவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். மேத்யூவின் மகளான சோனியா மேத்யூ, பாலா நகரில் வசித்து வருகிறார். மேத்யூவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை துணியால் ஒருவர் மூடுவதை பாலாவில் இருந்து லைவ்-ஆக பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனியா, இது குறித்து தனது பெற்றோர் வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் பிரபாத் குமார் என்பவரை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்.
Also read:
‘ஒரு மாவட்டம் ஒரு விமான நிலையம் திட்டம்’ - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..
பிரபாத் குமார் உடனடியாக இது குறித்து போலீஸ் எஸ்.ஐ ஜெயமோகனை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார். அப்போது வேறு ஒரு பகுதியில் இரவு ரோந்து சென்று கொண்டிருந்த எஸ்.ஐ ஜெயமோகன், சக காவலர் ராஜீவுடன், உடனடியாக கீழூருக்கு விரைந்தார். மேலும் சம்பவ பகுதியான வெள்ளூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்.
இதனிடையே, மேத்யூவின் வீட்டுக்கு பின் பக்கமாக சென்று திருடனை பிடிக்க முயன்ற போது, 2வது தளத்தில் இருந்த திருடன் போலீசை பார்த்ததும் அங்கிருந்து குதித்து தப்பியோடினான். ரப்பர் தோட்டங்கள், வயல்வெளி, சாலைகள் வழியாக பல கிமீ தூரம் துரத்திச் சென்து எஸ்.ஐ ஜெயமோகன், காவலர் ராஜீவ் ஆகியோர் திருடனை மடக்கிப் பிடித்தனர்.
Also read: ஒரே நாளில் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்திக்கு அதிர்ச்சியளித்த பாஜக!!
சித்தேட்டு புத்தன்புர பகுதியைச் சேர்ந்த 32 வயதாகும் பாபின்ஸ் ஜான் என்ற அந்த திருடன் நைட்டி அணிந்திருந்தார். நைட்டி அணிந்தவாறு திருடும் வழக்கமுடையவர். திருடனிடமிருந்து பூட்டை உடைக்க பயன்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அவரை வெள்ளூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
வேறு காவல் சரகத்தில் நடைபெற்ற குற்றத்தை தட்டிக்கழிக்காமல் கடமையைச் செய்த போலீசார் ஜெயமோகன், ராஜீவ் ஆகியோரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.