கேரள மாநிலம் கோட்டயத்தில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் "படகு இல்ல" சுற்றுலா தொடங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோட்டயம் அடுத்த குமரக்கோம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் பாரம்பரிய படகு இல்ல சவாரி உள்ளது. இங்கு கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருவர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அங்கு தொற்று குறைந்ததால், மீண்டும் படகு இல்ல சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
Also read... ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவில்லாமல் பயணம் செய்யலாம் - தெற்கு ரயில்வே!
Also read... ஜல்லிக்கட்டு - ஜனவரியில் காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ்!
சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் படகுகளில் பயணித்து இயற்கையை கண்டு ரசித்தனர். இருப்பினும் ஒமைக்ரான் பரவல் எதிரொலி காரணமாக ஜனவரி மாதத்திற்கான முன்பதிவு குறைந்துள்ளதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tourism