எதிர்கட்சித் தலைவர்கள் வீடுகளில் சோதனை! வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

இதற்கிடையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

news18
Updated: April 8, 2019, 8:29 AM IST
எதிர்கட்சித் தலைவர்கள் வீடுகளில் சோதனை! வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
தேர்தல் ஆணையம்
news18
Updated: April 8, 2019, 8:29 AM IST
வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் நடுநிலையாக செயல்படவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், தமிழகத்தில் தி.மு.க பொருளாளர் துரை முருகன் இல்லம் மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து, நேற்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின், இந்தூரிலிலுள்ள முன்னாள் உதவியாளர் பிரவீன் காக்கர் டெல்லியிலுள்ள கமல்நாத்தின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர குமார் ஆகியோரின் வீடுகளில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கமல்நாத் உதவியாளர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட அரை மணி நேரத்தில் தேர்தல் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில், ‘தேர்தல் சமயங்களில், வருமான வரித்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் முறைகேடுகளை தடுக்கத் தீவிரமாக செயல்படவேண்டும். ஆனால், அந்த சமயங்களில் நடுநிலையுடன், பாகுபாடு இல்லாமல் செயல்படவேண்டும். தேர்தலுக்கு சட்டவிரோத பணம் பயன்படுத்தப்பட்டால் அதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்படவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.Loading...Also see:

First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...