குருகிராமில் ஹோட்டலுக்கு தங்க வந்த வாடிக்கையாளரின் டெபிட் கார்டை திருடி ரூ.3.1 லட்சம் மதிப்பிலான பரிவர்த்தனை செய்ததாக ஹோட்டல் மேலாளர் ஒருவர் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி, குருகிராமில் உள்ள இந்திரபுரியைச் சேர்ந்த விவேக் யாதவ் (60) என்பவர், தனது டெபிட் கார்டைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டதாகவும், அதன் மூலம் நகைக்கடையில் தங்க நாணயங்களை வாங்கியுள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக, குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ப்ரீத் பால் சங்வான் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், விவேக் யாதவ் தன்னிடம் இரண்டு டெபிட் கார்டுகள் இருப்பதாகவும், தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், காணாமல் போன ஒரு டெபிட் கார்டு குறித்து புகார் செய்து அதன் பரிவர்த்தனையை முடக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், வங்கியிலிருந்து தனது காணாமல் போன டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்ததாக குறுஞ்செய்தி வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, அவரது வங்கி கணக்கில் இருப்பு குறைவாக இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததை தொடர்ந்தே அவர் காவல்துறை உதவியை நாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஐபிசி 379 மற்றும் 420 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் காவல் உதவி ஆணையர் சங்வான் கூறினார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் குழு புகார்களை சரிபார்க்க வங்கி விவரங்களை சேகரித்தது. வங்கி அறிக்கையின்படி, முதலில் அந்த டெபிட் கார்டு பஸ் ஸ்டாண்ட் அருகே பணம் எடுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து,அந்த டெபிட் கார்டு மூலம் சதர் சந்தையில் உள்ள நகைக்கடையில் தங்க நாணயங்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இதன் பின்னர், போலீஸார் குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கியது.
இதையும் படிங்க - பிரதமர் மோடி பாராட்டிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தின் கதை என்ன?
இதனிடையே, விசாரணையின் போது விவேக் யாதவ் தான் மூன்று நாட்கள் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள உள்ளூர் ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும், அந்த ஹோட்டலின் கணக்கை முடிப்பதற்காக அங்கு பணிபுரிந்த ஹோட்டல் ஊழியருடன் பணம் எடுக்க ஏடிஎம் சென்றதையும் கூறினார்.
இதன் அடிப்படையில் போலீசார் சிசிடிவியை சோதனையிட்ட போது, அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஹோட்டல் மேனேஜர் சோனு குமாரே டெபிட் கார்டை திருடி சென்று பரிவர்த்தனை மேற்கொண்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் குறித்து விசாரித்ததில், அவர் செக்டார் 12ல் ஒரு வாடகை அறையில் வசிப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சோனுவின் இருப்பிடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாணையில் அவர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், சம்பவம் நடந்த அன்று, விவேக் யாதவ் அளவுக்கு அதிகமான குடிபோதையில், நடக்க கூட முடியாத நிலையில் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹோட்டல் பில் செலுத்துவதற்காக மேலாளர் சோனுவும், விவேக் யாதவுடன் ஏடிஎம் சென்றுள்ளார். பின்னர் அறைக்கு திரும்பியதும், அவரது டெபிட் கார்டை எடுத்து, ரூ.1 லட்சம் பணமாகவும், ரூ.2.1 லட்சம் மதிப்பிலான தங்க நாணையங்களையும் (40 கிராம்) வாங்கியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, மேலளார் சோனுவிடமிருந்த திருடப்பட்ட டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கிய 40 கிராம் தங்க நாணயத்தை போலீசார் மீட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.