தண்ணீரை மிச்சப்படுத்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய பள்ளி நிர்வாகம்!

News18 Tamil
Updated: August 14, 2019, 5:14 PM IST
தண்ணீரை மிச்சப்படுத்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய பள்ளி நிர்வாகம்!
கோப்புப்படம்
News18 Tamil
Updated: August 14, 2019, 5:14 PM IST
தலைமுடி நீளமாக இருப்பதால் குளிக்க அதிகளவு தண்ணீர் செலவாகிறது என்பதால், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் தலைமுடியை பாதியாக வெட்டியுள்ளது தெலங்கானாவில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகம்.

தெலுங்கானா மாநிலத்தில் மெதக் என்ற நகரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்த மாணவிகளுக்கு தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.


கடந்த ஏப்ரல் மாதம் முதல் இப்பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. ஆழ்குழாய் கிணறு வறண்டதால் 3 நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு அதிக பொருட்செலவு ஆகியது.

பள்ளி மாணவிகள் குளிப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் செலவழிப்பதாகவும், மாணவிகளுக்கு தலைமுடி நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிக தண்ணீர் செலவு ஆவதாகவும் கருதிய தலைமை ஆசிரியர் அருணா ரெட்டி விநோத முடிவெடுத்துள்ளார். இதையடுத்து அங்கு தங்கி பயின்ற 180 மாணவிகளின் தலை முடியையும் வெட்ட அவர் உத்தரவிட்டார். இதனால் மாணவிகளின் தலைமுடி பாதியாக வெட்டப்பட்டது.

நேற்று மாணவிகளை சந்திப்பதற்காக அவர்களது பெற்றோர்கள் வந்த போது தங்கள் பெண் குழந்தைகள் முடிவெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Loading...

இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...