20 சிறுவர்களை பிடித்து வைத்துக்கொண்டு துப்பாக்கியால் மிரட்டிய நபரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபருக்காபாத் அருகே உள்ள கசாரியா கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் பாதம். கொலை வழக்கில் தொடர்புடையவர், பிறந்த நாள் பார்டிக்காக நேற்று பிற்பகலில் சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
பார்டிக்கு வந்த 20 சிறுவர்களை தனது வீட்டின் அடித்தளத்தில் அடைத்துவைத்து கதவை சாத்திக் கொண்ட அவர் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்தார். போலீசாருக்கு தகவல் சென்று அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது வீட்டிற்குள் 30 கிலோ வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சுபாஷ் பாதம் மிரட்டியுள்ளார். அதனால் கமாண்டோ படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் அவர் 6 முறை சுட்டதில் 3 காவலர்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். பின்னர் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சுபாஷ் பாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரின் பிடியில் இருந்த 20 சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தப் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 10 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கான வீடு மற்றும் கழிப்பறை கட்டித் தராததால் சுபாஷ் பாதம் இந்த செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சுபாஷின் மனைவியை அக்கம்பக்கத்தினர் கடுமையாக தாக்கியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.