• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நோய் பரிசோதனை அறிக்கைகளை அளிக்க மருத்துவமனைகள் மறுக்க கூடாது!

நோய் பரிசோதனை அறிக்கைகளை அளிக்க மருத்துவமனைகள் மறுக்க கூடாது!

மத்திய அரசு

மத்திய அரசு

  • News18
  • Last Updated :
  • Share this:
    தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோயாளிகளுக்கு உள்ள உரிமைகள் குறித்து தயாரித்த வரைவு அறிக்கை பரிந்துறைகளை ஏற்று, தேசிய மருத்துவ கவுன்சில் அதை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்துள்ளது.

    இந்தப் பரிந்துரைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுந்தன் வலியுறுத்தியுள்ளார்.

    எனவே இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோயாளிகளுக்கான உரிமைகள் என்னென்ன என்பதை இங்கு விளக்காகப் பார்க்கலாம்.

    1) மருத்துவமனைகள் எந்த ஒரு காரணம் சொல்லியும் இறந்தவரின் உடலை ஒப்படைக்க முடியாது என்று உறவினர்களிடம் கூறக்கூடாது.

    2) நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது நோயாளி பற்றிய தகவல்கள், நோய்க்கான காரணம், பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகள், சிகிச்சையால் ஏற்படும் பலன், சிக்கல், செலவு போன்ற விவரங்களை நோயாளி அல்லது அவர்களது உறவினர்கள் கேட்கும் பொது விளக்கமாகக் கூறவேண்டும்.

    3) நோயாளி, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் குறித்த அசல் அல்லது நகல் ஆவணங்கள், பரிசோதனை அறிக்கைகள், ரசீது, கட்டண விவரங்கள் போன்றவற்றை பெற உரிமை உண்டு.

    4) நோயாளியின் ஒப்புதலுக்குப் பிறகே எந்தவொரு பரிசோதனையையும் செய்ய வேண்டும். எந்த ஒரு பிரச்னை என்றாலும் நோயாளிக்கு இரண்டாவது கருத்து பெறுவதற்கு உரிமை உண்டு. அதற்கான ஆவணங்கள் மற்றும் தகவல்களை எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல், தாமதம் ஏதுமின்றியும் மருத்துவமனை வழங்க வேண்டும்.

    5) எல்லா நோயாளிகளுக்கும் தனிப்பட்ட உரிமைகள் உண்டு. எனவே நோயாளிகள் குறித்த விவரங்களில் மருத்துவமனைகள் ரகசியம் காக்க வேண்டும்.

    6) பெண் நோயாளியை ஆண் மருத்துவர் பரிசோதனை செய்யும் போது, அவர்களுடன் இன்னொரு பெண் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    மருத்துவமனைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வருவதை அடுத்து நோயாளிகளுக்கு உள்ள உரிமைகள் என்ன என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த விதிகளை பரிந்துரைத்துள்ளது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: