Home /News /national /

புறநகர் ரயிலில் பயணித்தவர் செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ!

புறநகர் ரயிலில் பயணித்தவர் செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ!

மனிதர்களுடன் சேர்ந்து குதிரை ஒன்றும் ரயில் பெட்டிக்குள் நிற்பதை காட்ட கூடிய வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோ பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மனிதர்களுடன் சேர்ந்து குதிரை ஒன்றும் ரயில் பெட்டிக்குள் நிற்பதை காட்ட கூடிய வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோ பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மனிதர்களுடன் சேர்ந்து குதிரை ஒன்றும் ரயில் பெட்டிக்குள் நிற்பதை காட்ட கூடிய வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோ பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சோஷியல் மீடியாக்களில் பல விஷயங்கள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. ஷேர் செய்யப்படும் விஷயங்கள் மற்றும் கன்டென்ட்கள் வினோதமா மற்றும் கண்ணைக் கவரும் விதமாக இருந்தால் அவை மிகவும் வைரலாகும். அது ஒரு வீடியோவாக இருக்கலாம் அல்லது ஒரு போட்டோவாக கூட இருக்கலாம்.

நம் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பொதுப் போக்குவரத்தில் மனிதர்கள் செல்லவே இடம் பத்தாது. பஸ்கள் அல்லது ரயில்கள் என எதுவாக இருந்தாலும் மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும். தினசரி பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வேலைக்கு செல்வோருக்கு அந்த பயணம் எப்படி இருக்கும் என்பதை நன்றாக உணர முடியும்.

சில நேரங்களில் நிற்க கூட இடமின்றி தங்களது ஒரு கால் மேல் மற்றொரு காலை வைத்து கொண்டே நீண்ட நேரம் கூட்ட நெரிசலில் பயணம் செய்வோர் நம் நாட்டில் ஏராளம்.

பொது போக்குவரத்து வாகனங்களில் நாய்கள், பூனைகள் போன்ற தங்கள் செல்லப் பிராணிகளை சிலர் அழைத்து செல்வதை நாம் நேரிலோ அல்லது இன்டர்நெட்டிலோ பார்த்திருப்போம். இந்நிலையில் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவம் குறிப்பிட்ட பொது போக்குவரத்து வாகனமான ரயிலில் பயணித்தோரை மட்டுமின்றி நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Also Read : ஆபீஸ்-க்கு வர சொன்னால் வேலையே வேண்டாம் - Apple நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கும் ஊழியர்கள்!

மேற்கு வங்கத்தில் நெரிசலான புறநகர் ரயில் ஒன்றின் பயணிகள் பெட்டிக்குள் குதிரை ஒன்றும் சேர்ந்து நின்று கொண்டே பயணிக்கும் போட்டோ மற்றும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது. ஆம், நீங்கள் படித்தது சரிதான்.! மனிதர்களுடன் சேர்ந்து குதிரை ஒன்றும் ரயில் பெட்டிக்குள் நிற்பதை காட்ட கூடிய வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோ பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.



அறிக்கைகளின் படி வைரலாகி வரும் இந்த வீடியோ கிளிப் சீல்டா - டயமண்ட் ஹார்பர் டவுன் இடையே இயக்கப்படும் உள்ளூர் ரயிலில் இருந்து எடுக்கப்பட்டது. குதிரை நிச்சயமாக தானே ஏறி ரயிலில் பயணிக்கவில்லை கூடவே அதன் உரிமையாளர் / பராமரிப்பாளர் அருகில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மேற்கு வங்கத்தின் புறநகர் ரயில்களில் சிறிய விலங்குகள் பயணிப்பது பொதுவான ஒன்று என்றாலும், வைரலான வீடியோவில் உள்ள குதிரை சிறிய விலங்கு அல்லவே.!! குறிப்பிட்ட குதிரை South 24 Parganas-ன் Baruipur-ல் நடைபெற்ற ஒரு ரேஸில் பங்கேற்ற பின் ரயிலில் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனிடையே பெரிய குதிரையுடன் ரயிலில் ஏறிய குறிப்பிட்ட நபரிடம் அங்கிருந்த சில பயணிகள் குதிரையுடன் ஏற கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால் அவர் பிற பயணிகளின் கூச்சலை காதில் வாங்காமல் குதிரையுடன் ரயில் பெட்டியில் ஏறியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து நேரடி புகார் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்து உள்ள கிழக்கு ரயில்வே அதிகாரிகள், இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறி இருக்கிறார்கள்.

புறநகர் ரயிலில் இருக்கும் கூட்டத்தில் பயணிகளின் எதிர்ப்பையும் மீறி ஒருவர் தனது பெரிய குதிரையுடன் பயணம் செய்துள்ளது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ நாடு முழுவதுமுள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி