முகப்பு /செய்தி /இந்தியா / தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

4 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

4 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

சிறுவன் நாய்களின் தாக்குதலுக்கு ஆளான பதறவைக்கும் வீடியோ சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hyderabad, India

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 4 வயது சிறுவன் தெரு நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள பாக் ஆம்பர்பேட் பகுதியில் உள்ள வசிப்பவர் கங்காதர். இவருக்கு 4 வயதில் பிரதீப் என்ற மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் வேலைக்காக 4 ஆண்டுகளுக்கு முன்னர் கங்காதர் ஹைதரபாத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் வொர்க் ஷாப்பில் வாட்ச்மேனாக வேலை செய்து வரும் இவர் கடந்த ஞாயிறு அன்று தனது 4 வயது மகனையும், ஆறு வயது மகளையும் தான் வேலை செய்யும் ஆட்டோமொபைல் வொர்க் ஷாப்பிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சிறுவனும், சிறுமியும் அருகே விளையாடத் தொடங்கினர். அப்போது 4 வயது சிறுவன் பிரதீப் சிறுமிக்கு சிறிது துரத்தில் தனியே நின்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 3 தெருநாய்கள் சிறுவனை சூழ்ந்து தாக்கத் தொடங்கின. பயந்து போன சிறுவன் தப்பி ஓட முயன்றான். ஆனால், அவனின் உடைகளை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவன் மீது ஏறி நாய்கள் கடித்து குதறின. சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட சகோதரி அதிர்ச்சி அடைந்து தந்தையை அழைத்துள்ளார். அதற்குள்ளாக சிறுவன் இந்த கொடூர தாக்குதலில் மயங்கி கிடந்துள்ளான்.

பதறிப்போய் சிறுவனை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும், சிறுவன் நாய்களின் தாக்குதலுக்கு ஆளான பதறவைக்கும் வீடியோ சிசிடிவியில் பதிவாகியது. இந்த காணொலி சமூகவலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அன்மை காலமாகவே, தெரு நாய் கடி காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு தீர்வு வேண்டும் என சமூக ஆர்வலளர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

First published:

Tags: CCTV, Dog, Hyderabad