ராகுல் காந்தி நல்ல முடிவை எடுப்பார்: காங்கிரஸ் முதல்வர்கள் நம்பிக்கை!

இருப்பினும், ராகுல் காந்தியின் முடிவுக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ராகுல் காந்தியே தலைவர் பதவியில் தொடரவேண்டும் என்று வற்புறுத்தினர்.

news18
Updated: July 1, 2019, 7:14 PM IST
ராகுல் காந்தி நல்ல முடிவை எடுப்பார்: காங்கிரஸ் முதல்வர்கள் நம்பிக்கை!
அசோக் கெஹ்லாட்
news18
Updated: July 1, 2019, 7:14 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் ராகுல் காந்தியின் எண்ணத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2017-ம் ஆண்டு ராகுல்காந்தி, பொறுப்பேற்றார். நடைபெற்று முடிந்த மக்களவைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி, தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இருப்பினும், ராகுல் காந்தியின் முடிவுக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ராகுல் காந்தியே தலைவர் பதவியில் தொடரவேண்டும் என்று வற்புறுத்தினர். இருப்பினும், ராகுல் காந்தி அவருடைய முடிவில் உறுதியாக இருந்துவருகிறார்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், கர்நாடகா துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா ஆகியோர் ராகுல் காந்தியுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் மாநில முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அசோக் கெஹ்லாட், ‘ராகுல் காந்தி, நாங்கள் சொன்ன விஷயங்களை கவனமாகக் கேட்டார். இந்தக் கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சித் தொண்டர்கள், கட்சித் தலைவர்கள் உணர்வுகள் குறித்து விளக்கினோம். அதுகுறித்து, அவர் முடிவு செய்வார். நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...