Home /News /national /

முதலிரவு அறையில் ரகசிய கேமரா.. வீடியோவை காட்டி மாப்பிள்ளையை மிரட்டி பணம் பறிப்பு - கேரள பெண்கள் கைது

முதலிரவு அறையில் ரகசிய கேமரா.. வீடியோவை காட்டி மாப்பிள்ளையை மிரட்டி பணம் பறிப்பு - கேரள பெண்கள் கைது

கன்னியாகுமரி போலி திருமணம்

கன்னியாகுமரி போலி திருமணம்

போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்த திருமணமே போலி திருமணம் என தெரியவந்தது

    கேரளா மாநிலத்தில் திருமணம் செய்து வைத்து  அவர்களின் முதலிரவு நடக்கும் அறையிலும் ரகசிய கேமரா பொருத்தி பணம் பறித்த கும்பல்.

    கேரள மாநிலம் கொச்சி கடவந்தறா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஸத்தார். பிசினஸ் செய்து வருகிறார். இவர் திருமணத்துக்காக பெண் தேடிக்கொண்டிருந்தார். இவருக்கு திருமண தரகர் மூலம் காசர்கோடு நாயன்மார்மூலை பகுதியைச் சேர்ந்த ஸாஜிதா(30) என்ற பெண் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. ஸாஜிதாவின் பெற்றோர் எனக் கூறிக்கொண்டு என்.ஏ.உம்மர்(41) அவரது மனைவி பாத்திமா(35) ஆகியோர் அப்துல் ஸத்தரிடம் திருமணம் குறித்து பேசினர்.

    Also Read: ஜாமீன் வழங்க முடியாது – நடிகை மீரா மிதுன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

    இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி அப்துல் ஸத்தாருக்கும் ஸாஜிதாவிற்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரையும் தங்க வைப்பதற்காக கொவ்வல்பள்ளியில் வாடகைக்கு அப்பார்ட்மெண்ட் எடுத்தனர். அங்கு வைத்து அப்துல் ஸத்தாருக்கும் ஸாஜிதாவிற்கும் முதலிரவு நடந்துள்ளது.

    அவர்களது முதலிரவு நடப்பதற்கு முன்பே அப்பார்ட்மெண்டில் சிலர் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். முதலிரவு நடந்தபின்னர் ரகசிய கேமராவில் இருந்து வீடியோ காப்பி செய்துள்ளனர். அந்த வீடியோவை இக்பால் என்பவர் அப்துல் ஸத்தரிடம் காட்டி இதை நாங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி பணம் மற்றும் நகை ஆகியவற்றை கேட்டுள்ளனர். அவரும் முதலில் 3.75 லட்சம் ரூபாய் மற்றும் ஏழரை பவுன் தங்க நகை ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்.

    Also Read:  போலி பத்திரத்தில் எஸ்.ஐ கையெழுத்து.. சந்தேகமடைந்த சார் பதிவாளர் - போலீஸாருக்கு ஷாக் கொடுத்த கோவை பெண்மணி

    அவர்கள் பணம் மற்றும் நகை வேண்டும் என தொடர்ச்சியாக மிரட்டியதால் இதுகுறித்து அப்துல் ஸத்தார் காஞ்ஞங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரணை  நடத்தியதில் இந்த திருமணமே போலி திருமணம் என தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ஸத்தாரை திருமணம் செய்த ஸாஜிதா, அவரது பெற்றோர் எனக்கூறிய என்.ஏ.உம்மர், பாத்திமா மற்றும் வீடியோவை காட்டி மிரட்டிய இக்பால் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

    போலி திருமணம் நடத்தி பணம் பறித்த கும்பல்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "என்.ஏ.உம்மர் மற்றும் பாத்திமா ஆகியோர் கணவன் மனைவிதான். ஆனால் அவர்கள் ஸாஜிதாவின் பெற்றோர் அல்ல. என்.ஏ.உம்மர் உள்ளிட்டோர் ஸாஜிதாவை போலியாக திருமணம் செய்து வைத்து  அவர்களின் முதலிரவு நடக்கும் அறையிலும் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி அப்துல் ஸத்தாரை மிரட்டியுள்ளனர். ஸாஜிதா இதுபோன்று ஏற்கனவே கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு உள்ளது" என்றனர்.

    செய்தியாளர் - சஜயகுமார் தனஞ்செயன் (கன்னியாகுமரி )



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Money, News On Instagram, Video

    அடுத்த செய்தி