• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ’ஹோமியோபதி மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கலாம்.. குணமாகும் எனும் விளம்பரம் கூடாது’ - உச்சநீதிமன்றம்

’ஹோமியோபதி மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கலாம்.. குணமாகும் எனும் விளம்பரம் கூடாது’ - உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)

உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)

ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட கோவிட் -19-க்கான ஹோமியோபதி மருத்துவ பயிற்சியாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும் ஹோமியோபதி மருத்துவ பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

  • Share this:
    கோவிட் -19-ஐப் பொறுத்தவரை நோய்த்தடுப்பு, மேம்பாடு மற்றும் தணிப்பு ஆகியவற்றுக்கான மருந்துகளை ஹோமியோபதி மருத்துவ பயிற்சியாளர்கள் பரிந்துரைக்க முடியும் என்றும், அதுவும் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    சட்டப்பூர்வ விதிமுறைகள் விளம்பரங்களை தடைசெய்திருப்பதை மேற்கோள்காட்டி, ​​ஹோமியோபதி மருத்துவ பயிற்சியாளர்கள் COVID-19 நோயை குணப்படுத்த திறமையானவர்கள் என்று விளம்பரம் செய்ய எந்த வித உரிமையும்  இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    ஆயுஷ் அமைச்சகம் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) வழங்கிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களைப்போல, கோவிட் -19 -ஐத் தடுப்பதற்கும் தணிப்பதற்கும் ஹோமியோபதி மருத்துவத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் வழங்கிய மார்ச் 6-தேதியிட்ட ஆலோசனையையும், ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட கோவிட் -19-க்கான ஹோமியோபதி மருத்துவ பயிற்சியாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும் ஹோமியோபதி மருத்துவ பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

    நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோரின் அமர்வு கூறுகையில், ’கோவிட் -19-க்கு சரியான மருந்து / தடுப்பூசி கண்டுபிடிக்க முழு உலக விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியில் ஈடுபடும்போது, ​​எந்தவொரு யூகத்தையும் செய்ய எந்த வித இடமும் இல்லை.  ஆயுஷ் அமைச்சின் வழிகாட்டுதல்கள், ஹோமியோபதியை மூன்று வழிகளில் பின்பற்றுவதற்கு குறிப்பாக அனுமதிக்கிறது. தடுப்பு மற்றும் முற்காப்பு; நோய் போன்ற COVID-19 இன் அறிகுறி மேலாண்மை மற்றும் வழக்கமான கவனிப்பில் கூடுதல் தலையீடுகள் ஆகியவற்றை அனுமதிக்கிறது.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: