வழிப்பறியில் ஈடுபட்டு சிக்கிய மிடில் கிளாஸ் குடும்பத் தலைவி - அதிர்ந்த போலீசார்!

மாதிரி படம்

சின்ன ரிஸ்க் எடுத்து சொகுசாக வாழலாம் என எண்ணிய அப்பெண் தனது நண்பர் சஞ்சய் மஞ்சி என்பவரை மூளை சலவை செய்து இந்த செயலில் ஈடுபட துணைக்கு அழைத்துவந்திருக்கிறார்.

  • Share this:
பொதுவாக குடும்பத் தலைவிகளிடமிருந்து தான் வழிப்பறி நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இங்கு கொஞ்சம் தலைகீழாக குடும்பத் தலைவி ஒருவரே வழிப்பறியில் ஈடுபட்டதை அறிந்த போலீசார் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவின் டி.என்.கோஷ் சாலையில் உள்ள ஜதின் தாஸ் பூங்கா அருகே கடந்த செவ்வாயன்று அதிகாலை 1.45 மணியளவில் பிரேந்தர் குப்தா மற்றும் அவருடைய மனைவி மனிந்தர் கவுர் ஆகியோர் தங்களின் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்த இருவர் இத்தம்பதியரிடமிருந்து பொருட்களை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற போது, பிரேந்தர் குப்தா அவர்கள் இருவரையும் தப்பிச் செல்ல முடியாதபடி தடுத்து கத்தி கூச்சல் போட்டார். அங்கு வந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் திருடிய பொருட்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சம்பவத்தில் தொடர்புடையவர்களில் மூளையாக செயல்பட்டு சிக்கியிருப்பவர் ஒரு பெண், அவர் ஒரு குடும்பத் தலைவி என காவல்துறையினருக்கு தெரியவந்தது.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டபோது, இந்த வழிப்பறி தான் அப்பெண்ணுக்கு முதல் வழிப்பறி சம்பவம் என்றும், முதல் சம்பவத்திலேயே காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.

Also read:  சாமியார் பேச்சைக்கேட்டு மனைவியை நிர்வாணப்படுத்தி பூஜை.. சிக்கிய கணவர் குடும்பத்தினர்..

சுதிப்தா தே எனும் அப்பெண் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவி, இவர் குறிப்பிட்ட சொகுசு வாழ்க்கை முறையில் வாழ்ந்து பழிகியிருக்கிறார். இடையில் கொரோனா பரவல் ஏற்படுத்திய பொருளாதார இழப்பால் அவரால் அந்த வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியாமல் போயிருக்கிறது. மீண்டும் அந்த வாழ்க்கை முறையை வாழ வேண்டுமென்பதற்காக சின்ன ரிஸ்க் எடுத்து சொகுசாக வாழலாம் என எண்ணிய அப்பெண் தனது நண்பர் சஞ்சய் மஞ்சி என்பவரை மூளை சலவை செய்து இந்த செயலில் ஈடுபட துணைக்கு அழைத்துவந்திருக்கிறார்.

Also read:   எங்கிட்ட சொல்லாம பானிபூரி வாங்கலாமா? – மனைவி செய்த பகீர் சம்பவம்!

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெண் வழிப்பறி கொள்ளையரை கைது செய்திருக்கிறோம். முன்னதாகவே இது போல வழிப்பறியில் ஈடுபடும் பெண்களை பார்த்திருக்கிறோம் என்றாலும் இவருடைய பாணி வித்தியாசமாக இருந்தது. தானே களத்தில் இறங்கி துனிச்சலாக அவர் வழிப்பறி செய்தார் என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: